சுழலும் கேமிரா உடன் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி A80!

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக சாம்சங் கேலக்ஸி A80 அறிமுகமாகியுள்ளது.

சுழலும் கேமிரா உடன் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி A80!
சாம்சங் கேலக்ஸி A80
  • News18
  • Last Updated: August 1, 2019, 12:35 PM IST
  • Share this:
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்ஃபோன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

சுழலும் வகையிலான கேமிரா முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பக்கத்திலிருந்தும் புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முடியும். புதிய ஸ்னாப்ட்ராகன் 730G சிப்செட் உடன் வெளியாகும் முதல் ஃபோனும் இதுவே.

6.7 இன்ச் ஹெச்டி சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட ஃபோனில் விரல்நுனி சென்சாரும் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக சாம்சங் கேலக்ஸி A80 அறிமுகமாகியுள்ளது. சுழலும் கேமிரா இன்ஃப்ராரெட் சென்சார் உடன் 3டி ஆழமுடன் 48+8 மெகாபிக்சல் கொண்டதாக உள்ளது.


பின் பக்கம் திரும்பியபடி இருக்கும் கேமிரா நீங்கள் செல்ஃபி ஆப்ஷனை க்ளிக் செய்த உடன் சுழன்று மேல் எழும்பி செல்ஃபி கேமிராவாக இருக்கும். இதர சிறப்பு அம்சங்களாக 4ஜி வோல்ட், வைஃபை 802.11ac, ப்ளுடூத் v5.0, யூஎஸ்பி டைப் சி மற்றும் 3,700mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இப்புதிய கேலக்ஸி A80-ன் விலை 47,990 ரூபாய் ஆகும்.

மேலும் பார்க்க: ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் அமேசான் ‘சுதந்திர தின சேல்’- மொபைல் ஃபோன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
First published: August 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading