கேஷ்பேக் உடனான சாம்சங் கேலக்ஸி A80 முன்பதிவு..!

இந்தியாவில் முதன்முறையாக 730G SoC ஸ்னாப்ட்ராகன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனாக சாம்சங் கேலக்ஸி A80 உள்ளது.

கேஷ்பேக் உடனான சாம்சங் கேலக்ஸி A80 முன்பதிவு..!
சாம்சங் கேலக்ஸி A80
  • News18
  • Last Updated: July 24, 2019, 6:05 PM IST
  • Share this:
சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்ஃபோனுக்கான முன்பதிவு தற்போது கேஷ் பேக் ஆஃபர் உடன் தொடங்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A80 இந்தியாவில் கடந்த மாதம் வெளியானது. இதற்கான முன்பதிவு தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த லைவ் முன்பதிவு காலக்கட்டத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா தவணை முறை, 5 சதவித கேஷ்பேக் ஆஃபர் ஆகியவை வழங்கப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி A80-ன் விலை 47,990 ரூபாய் ஆகும். வெள்ளை, கறுப்பு, கோல்டு ஆகிய மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்ஃபோன் வெளியாகிறது. சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் முன்பதிவு நடக்கிறது.


சிட்டி பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடியும் உள்ளது. மேலும், 17,990 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ் ஆஃபரும் வழங்கப்படுகிறது. ஜூலை 31-ம் தேதி வரையில் இந்த முன்பதிவு நடக்க உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் விற்பனை நடக்கிறது.

இந்தியாவில் முதன்முறையாக 730G SoC ஸ்னாப்ட்ராகன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனாக சாம்சங் கேலக்ஸி A80 உள்ளது. 3,700mAh பேட்டரி உடன் 25W அதிவிரைவு சார்ஜிங் திறனும் கொடுக்கப்படுகிறது. 48+8 மெகாபிக்சல் கேமிரா IR சென்சார் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..!
First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading