சாம்சங் நிறுவனம் புதிதாக A சீரிஸ் வரிசையில் A80 ஸ்மார்ட்ஃபோனை இந்திய சந்தையில் களம் இறக்க உள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரும் டெக் நிறுவனமான சாம்சங், ஜென் Z தலைமுறையினரையும் மில்லினியன் இளைஞர்களையும் கவரும் வண்ணம் புதிய சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்துகிறது. ட்ரிபிள் கேமிரா, ஸ்கிரீன் டிஸ்ப்ளே என அசத்தும் சிறப்பம்சங்கள் உடன் அறிமுகமாகிறது.
இதுகுறித்து சாம்சங் குழு தலைவர்களுள் ஒருவரான இயான் ஜியாங் கிம் கூறுகையில், “ஸ்மார்ட்ஃபோன் சந்தையைப் பொறுத்தவரையில் இந்தியாவில் வேகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். இந்திய சந்தையை வென்றாலே போதும். உலக சந்தையை எளிதில் வென்றுவிடுவோம்.
இந்தியர்கள் தொழில்நுட்பப் பிரியர்கள். நல்ல, புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பார்கள். அதனாலே எங்களது தயாரிப்புகள் பலவற்றையும் நாங்கள் இந்தியாவிலேயே அறிமுகப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.
சாம்சங் கேலக்ஸி இதுவரையில் A சீரிஸ் வரிசையில் A50, A30, A20, A10, A70 மற்றும் A2 Core ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்முறை A80 மூலம் இந்தியாவில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சந்தையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது சாம்சங்.
மேலும் பார்க்க: Mi மேக்ஸ், Mi நோட் சீரிஸ்கள் நிறுத்தப்படுகிறது- ஜியோமி தலைவர் லேய் ஜுன் உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.