ஃப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்ஸி A70..!

இந்தியாவில் இந்த மொபைல் 28,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.

Web Desk | news18
Updated: May 1, 2019, 1:23 PM IST
ஃப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்ஸி A70..!
சாம்சங் கேலக்ஸி A70
Web Desk | news18
Updated: May 1, 2019, 1:23 PM IST
இன்று முதல் ஃப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி A70.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சாம்சங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள A சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மே 1-ம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A70 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஃப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் இன்று முதல் சாம்சங் கேலக்ஸி A70 விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.


அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 4500mAh பேட்டரி இந்த ஃபோனின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த மொபைல் 28,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உபயோகப்படுத்தி வாங்கினால் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க: இமயமலையில் பனிமனிதன் கால்தடமா? - ராணுவம் வெளியிட்ட படங்கள்
First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...