ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A13 5G விவரங்கள் - சாம்சங் நிறுவனம் அதிர்ச்சி!

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A13 5G விவரங்கள் - சாம்சங் நிறுவனம் அதிர்ச்சி!

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A13 5G

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A13 5G

சாம்சங் கேலக்ஸி A13 5G மொபைலானது அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் $ 259 டாலருக்கு விற்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னரே ‘சாம்சங் கேலக்ஸி A13 5G மொபைல் குறித்த விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் லீக்காகி வைரலாகி வருகிறது.

சாம்சங் கேலக்ஸி “ ஏ ” சீரிஸின் மொபைல்கள் உலகம் முழுவதும் சக்ஸஸ் ஆன மாடலாகும்.சாம்சங் நிறுவனம் தற்போது ‘எம்’ சீரிஸ்களில் 5G மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனை அடுத்து சாம்சங் ஏ சீரிஸ்களில் 5G சேவையை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக அது எம் சீரிஸ்களை போல, மலிவு விலையில் வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மாடல் மொபைலை வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே தற்போது சாம்சங் கேலக்ஸி A13 5G மொபைல் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. Onleaks மற்றும் Zouton நிறுவனங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த மொபைலில் ஆண்ட்ராய்ட் 11 ஓஎஸ் உள்ளதாகவும், இதனால் இந்த மொபைல் பயன்படுத்தும் போது , எந்தவித ஹாங் இல்லாமலும் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

மொபைலின் பின் புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கும்.முதன்மை (Front) கேமரா 50 எம்.பியை கொண்டிருக்கும். 5 எம்.பி அல்ட்ராவைடு கேமரா, 2MP மைக்ரோ சென்சார் கேமராவையும் உள்ளடக்கி இருக்கிறது. இதன் செல்பி கேமரா பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இதில் 6.48 இன்ச் முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே இருக்கும். அநேகமாக ‘நாட்ச்’ டிஸ்பிளே இந்த மொபைலில் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Also read... ஆப்பிள் மொபைல் வாங்கினால் ஆப்பிள் ஏர்பாட்ஸ் இலவசம்...!

மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC ப்ராசசர் உள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் ஒரே வேரியண்ட் மாடலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்ற கம்பெனி மொபைல்களை போல, இதுவும் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 5000 mAh அளவுள்ள பேட்டரி வசதியையும் பெற்றுள்ளது. மொபைலின் பக்கவாட்டில் ‘கைரேகை சென்சார் ’ பொருத்தப்பட்டிருக்கும். கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி A13 5G மொபைலானது அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் $ 259 டாலருக்கு விற்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதனை இந்திய மதிப்பில் பார்க்கும்போது, ரூ.18,000 க்கும் கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சாம்சங் எம் சீரியஸ் இந்திய சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதே விலையில் A13 5G மொபைல் வெளிவந்தால் நிச்சயம் அது ரெட்மி, போக்கோ,ரியல்மீ போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை தரும். இந்த மாடல் வெற்றி பெற்றால் ‘ஏ22’ மாடலும் விரைவில் வெளிவரும் என்றும் கூறுகிறார்கள்.

First published:

Tags: Samsung