வெளியீட்டுக்கு முன்னரே லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A10 விவரங்கள்..!

சாம்சங் கேலக்ஸி A10 மொபைலின் விலை இந்தியாவில் 8,990 ரூபாய் ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 25, 2019, 6:51 PM IST
வெளியீட்டுக்கு முன்னரே லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A10 விவரங்கள்..!
மாதிரி படம்
Web Desk | news18
Updated: July 25, 2019, 6:51 PM IST
தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி A10 குறித்தான விவரங்கள் வாராவாரம் லீக் ஆகிவருவது தொடர் கதையாகி உள்ளது.

2ஜிபி ரேம் உடன் MediaTek Helio P22 SoC திறன் கொண்டதாக சாம்சங் கேலக்ஸி A10 வெளிவரும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு எண்டர்ப்ரைஸ் இணையதளப் பக்கத்தில் கூட A10 புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலைப் பட்டியலும் லீக் ஆகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A10 மொபைலின் விலை இந்தியாவில் 8,990 ரூபாய் ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் 13 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமிராவும் 2 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமிராவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த அப்க்ரேட் வெர்ஷனாக வெளிவர உள்ள சாம்சங் கேலக்ஸி A10, விரல்நுனி ஸ்கேனர் உடன் இருக்கலாம். ஆண்ட்ராய்டு 9 பை, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரியல்மி U1, ரெட்மி 7, அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M2 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மிகப்பெரும் போட்டியாளராக சாம்சங் கேலக்ஸி A10 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...