Home /News /technology /

சாம்சங் Fab Grab Fest விற்பனை தொடங்கியது - ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி!

சாம்சங் Fab Grab Fest விற்பனை தொடங்கியது - ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி!

Samsung Fab Grab Fest Sale

Samsung Fab Grab Fest Sale

Samsung Fab Grab Fest Sale | சாம்சங் பிராண்டின் நியோ OLED டிவி அல்லது கிரிஸ்டல் 4K UHD டிவியை வாங்க விரும்பினால் நீங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம். குறிப்பாக சாம்சங் ஷாப் செயலியில் இருந்து நீங்கள் இந்த புராடக்ட்டை ஆர்டர் செய்தால், மேலும் ரூ.4,500 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

மேலும் படிக்கவும் ...
சாம்சங் தனது புதிய ஃபேப் கிராப் ஃபெஸ்ட் விற்பனையை (Fab Grab Fest sale) இந்தியாவில் அறிவித்துள்ளது. மே 1ம் தேதி முதல் இந்த அதிரடி விற்பனையை தொடங்கியது. மேலும் இது ஒரு வாரத்தில் முடிவடையவும் உள்ளது. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் லேப்டாப் போன்ற புராடக்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடியை தந்துள்ளது. மேலும் இது போன்ற பிற சலுகைகளையும் கொண்டு வருகிறது.

கூடுதலாக, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகைகளையும் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து வழங்குகிறது. எனவே, நீங்கள் புதிய கேஜெட்கள் அல்லது லேப்டாப் வாங்க விரும்பினால் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஃபேப் கிராப் ஃபெஸ்ட் விற்பனையின் சலுகைகள் மற்றும் சிறப்பு விலையில் பற்றிய விரிவான தகவல்களை இனி பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் :

நீங்கள் சாம்சங் கேலக்சி S22, கேலக்சி S20 FE 5G, கேலக்சி M53 5G மற்றும் கேலக்சி M32 போன்ற ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால் அவற்றிற்கு இந்த விற்பனையில் 50 சதவீதம் வரை தள்ளுபடிகள் உள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களுடன் ரூ.999 மதிப்புள்ள இலவச ட்ராவெல் அடாப்டர் மற்றும் மொபைல் கவர் போன்ற பிற புராடக்ட்களையும் நீங்கள் பெறலாம். எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி அல்லது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தி நீங்கள் 20 சதவீதம் வரை கேஷ்பேக்கையும் பெறலாம்.

லேப்டாப் :

லேப்டாப் வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகள் உண்டு. சாம்சங் கேலக்சி புக் 2 மாடல் லேப்டாப்பை 16 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பெறலாம். மேலும் நீங்கள் கேலக்சி பட்ஸ் 2 புராடக்டை வெறும் 999 ரூபாய்க்கு இந்த அதிரடி சேலில் வாங்க முடியும். இத்துடன் குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு 20 சதவீதம் கேஷ்பேக்கும் கிடைக்கும். .



ஸ்மார்ட் டிவி :

சாம்சங் பிராண்டின் நியோ OLED டிவி அல்லது கிரிஸ்டல் 4K UHD டிவியை வாங்க விரும்பினால் நீங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம். குறிப்பாக சாம்சங் ஷாப் செயலியில் இருந்து நீங்கள் இந்த புராடக்ட்டை ஆர்டர் செய்தால், மேலும் ரூ.4,500 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Also Read : கார் வாங்க இனி ஷோரூம் போக வேண்டாம் - வீட்டில் இருந்தே வாங்கலாம்

டேப்லட் :

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவியை போன்றே டேப்லட் போன்ற புராடக்டுகளுக்கும் சில தள்ளுபடிகளை குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, சாம்சங் கேலக்சி டேப் S8 டேப்லெட், கேலக்சி டேப் A8 அல்லது கேலக்சி வாட்ச் 4 ஆகியவற்றிற்கும் அதிரடி தள்ளுபடிகள் உள்ளன. மேலும் இவற்றை வார கால விற்பனையில் 50 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பெறலாம்.

இந்த முறை கேட்ஜெட்களை அதிக தள்ளுபடிகளுடன் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, சாம்சங் ஃபேப் கிராப் ஃபெஸ்ட் விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Offer, Samsung, Technology

அடுத்த செய்தி