அதிரடி விலைக்குறைப்பில் சாம்சங்- ரூ.7 ஆயிரம் குறைந்த கேலக்ஸி S9+

Polaris Blue நிறம் ஸ்டாக் இல்லாததால் சாம்சங் அந்த ஸ்மார்ட்ஃபோனை விலைக்குறைப்பில் சேர்க்கவில்லை.

அதிரடி விலைக்குறைப்பில் சாம்சங்- ரூ.7 ஆயிரம் குறைந்த கேலக்ஸி S9+
சாம்சங் s9-plus
  • News18
  • Last Updated: February 4, 2019, 11:20 AM IST
  • Share this:
சாம்சங் நிறுவனத்தின் சூப்பர் ஸ்மார்ட்ஃபோன் ஆன கேலக்ஸி S9+ விலை 7ஆயிரம் ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த விலைக்குறைப்பை இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஆன்லைன் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி S9+ ஸ்மார்ட்ஃபோனின் விலை 7 ஆயிரம் ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி கொண்ட 64,900 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S9+, இந்தியாவில் மட்டும் 7 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 57,900 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

புதிய Polaris Blue நிற ஹேண்ட்செட் தவிர இதர நிறங்களுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும், Polaris Blue நிறம் ஸ்டாக் இல்லாததால் சாம்சங் அந்த ஸ்மார்ட்ஃபோனை விலைக்குறைப்பில் சேர்க்கவில்லை. 128ஜிபி உடன் Sunrise Gold நிறமுடைய கேலக்ஸி S9+ 68,900 ரூபாயிலிருந்து 61,900 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


6ஜிபி ரேம், 64/128/256 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்டுள்ளது S9+. 6.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2960x1440 ரெசொலியூஷன் கொண்டு அசத்துகிறது கேலக்ஸி S9+.

மேலும் பார்க்க: ஸ்டாலினும், தினகரனும் அரசியலில் சின்னதம்பிகள்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!
First published: February 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்