சாம்சங் நிறுவனம், Galaxy J6 ஸ்மார்ட்ஃபோனின் விலையைக் குறைத்து 10,490 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கேலக்ஸி J6 11,490 ரூபாய்க்கு அறிமுகமானது. 2018-ம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கியபோது சாம்சங் தனது கேலக்ஸி J6, கேலக்ஸி J4, கேலக்ஸி J2 மற்றும் கேலக்ஸி J2 Core ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களின் விலையைக் குறைத்தது.
அதன் பின்னர் எந்தவொரு தள்ளுபடியும் விலைக்குறைப்பும் அறிவிக்கப்படாத நிலையில் கேலக்ஸி J6, தற்போது Asus ZenFone Max M2 மற்றும் ரெட்மி 6 Pro ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுடன் போட்டியிடுவதால் 1,000 ரூபாய் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தற்போது 3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரெச் ஸ்பேஸ் கொண்ட சாம்சங் கேலக்ஸி J6 10,490 ரூபாய் ஆக விற்கப்பட உள்ளது.
மேலும், சாம்சங் கேலக்ஸி A7 மற்றும் கேலக்ஸி A9 ஆகிய இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களின் விலையையும் மொத்தமாக 6ஆயிரம் ரூபாய் வரையில் குறைக்கத் தயாராக வருகிறது சாம்சங்.
மேலும் பார்க்க: பேட்ட படம் எனக்கும் மகிழ்ச்சி தான்: ரஜினி பராக்
Published by:Rahini M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.