கடந்த செப்டம்பர் மாதம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதை தொடங்கியுள்ளன. மிகவும் விரைவான சர்ஃபிங் 5ஜி மூலம் சாத்தியம் என்பதால் 5ஜி சேவையின் பரவலான வருகையை பயனர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதோடு செல்போன் நிறுவனங்களும் புதிய மேம்பட்ட 5ஜி மொபைல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராகி வருகிறார்கள். மற்ற நிறுவனங்களை முந்திக் கொண்டு சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது.
11,000 ரூபாயில் 5ஜி மொபைல்களை வழங்க முன்வந்திருக்கிறது சாம்சங். பதினோறாயிரம் ரூபாய்க்கு புதிய மாடலா? எனக் கேட்கிறீர்களா? அது தான் இல்லை. ஏற்கனவே இருக்கும் சில மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்து மற்ற நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது சாம்சங். எந்த மாடல், எவ்வளவு விலை குறைப்பு… உள்ளிட்ட விபரங்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G) மாடல் போன்களின் விலையைத் தான் அதிரடியாக குறைத்திருக்கிறது சாம்சங் நிறுவனம் . ஏற்கனவே இருக்கும் இந்த போன் இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல்களின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999 ஆகும். தற்போது இந்த 2 மாடல்கள் மீதும் தலா இரண்டாயிரம் ரூபாய் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது சாம்சங். இதையடுத்து சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 6ஜிபி+128 ஜிபி மாடல் போனின் விலை ரூ.13,999. மிட்நைட் ப்ளூ, ஸ்டார் டஸ்ட் பிரவுன் மற்றும் அக்வா கிரீன் என 3 வண்ணங்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு மட்டும் அல்ல… வேறு சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன!
சாம்சங் ஷாப் ஆப் (Samsung Shop App) வழியாக சாம்சங் கேலக்ஸி M13 5G ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2000 வரையிலான தள்ளுபடியை பெறுவார்கள். அதுமட்டுமின்றி, எச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.1,000 என்கிற உடனடி கேஷ்பேக்கையும் பெறலாம். ஏற்கனவே இந்த மாடல்களின் ஸ்பெசிஃபிகேசன் அறிந்தவர்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் 11ஆயிரத்திற்கு 5ஜி போனா? எனக் கேட்பவர்களுக்காக இந்த மாடல்களின் விபரங்களை பார்க்கலாம்.
Read More : சூப்பரா இருக்கே.. பட்ஜெட் விலையில் பக்காவான நோக்கியா ஸ்மார்ட்போன்.!
இது 6.5 இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்டை கொண்டுள்ளன இந்த போன்கள். 6ஜிபி வரையிலான ரேம் உள்ள இந்த மாடலில் இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 128ஜிபி வரையிலான ஸ்டோரேஜை வழங்குகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டை சேர்ப்பதன் மூலம் இதன் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கலாம். டூயல் சிம் ஆப்சன், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் 4, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரர், டூயல் ரியர் கேமராவுடன் 50MP மெயின் கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்ஃபி சென்சார், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியுடன் கிடைக்கின்றன இந்த மாடல்கள். அப்புறம் என்ன சாம்சங் சாய்ஸ்தான்.
இதே போல் வேறு சில ஹையர் எண்ட் மாடல்களின் விலைகளையும் குறைக்க முடிவு செய்துள்ளது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையால் கலக்கத்தில் இருக்கின்றன மற்ற நிறுவனங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Smartphone