முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 2 வருடம் நோ-காஸ்ட் EMI சலுகையை அறிவித்த சாம்சங் நிறுவனம்..!

ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 2 வருடம் நோ-காஸ்ட் EMI சலுகையை அறிவித்த சாம்சங் நிறுவனம்..!

சாம்சங் போன்

சாம்சங் போன்

Samsung | இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோன்களுக்காக மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாக இருந்து வருகிறது சாம்சங். விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை.. நல்ல தரமான பிராண்ட் ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வு  Samsung-ஆக இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...

இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோன்களுக்காக மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாக இருந்து வருகிறது சாம்சங். விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை.. நல்ல தரமான பிராண்ட் ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வு Samsung-ஆக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள சாம்சங் ஃபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் தங்களது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்க விரும்புபவர்களுக்கு சாம்சங் நிறுவனம் புதிய EMI கட்டண விருப்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த திட்டமானது samsung-ன் Flagship ஸ்மார்ட் ஃபோன்களை வாங்குபவர்களுக்காக புதிய நோ-காஸ்ட் EMI பிளான்களை (no-cost EMI plans) கொண்டு வருகிறது.

இது ஃபிளாக்ஷிப் சாம்சங் ஸ்மார்ட் ஃபோன்களில் 24 மாதங்களுக்கான நோ காஸ்ட் EMI சலுகையாகும். இந்த ஆஃபர் Galaxy Z Fold3 5G, Galaxy Z Flip3 5G மற்றும் Galaxy S22 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்க விரும்புபவர்களுக்கு பொருந்தும். இந்த புதிய No-cost EMI சலுகையானது, Galaxy S22-க்கு ரூ.3,042-ல் தொடங்கும் EMI திட்டத்துடன் யூஸர்கள் இந்த ஃபோன்களை வாங்லாம். ஆனால் அதே சமயம் ஹை-என்ட் Galaxy S22 Ultra போன்ற ஃபோன்களை யூஸர்கள் ரூ.4,584 என்ற EMI விலையில் பெறலாம்.

இந்த புதிய EMI சலுகைகள் HDFC வங்கியுடன் இணைந்து வழங்கப்படும் என்றும் இந்தியாவில் உள்ள ரீட்டெயில் அவுட்லெட்களில் இவற்றை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. Samsung Galaxy S22 ஸ்மார்ட் ஃபோன் விலை ரூ.72,999-ல் தொடங்குகிறது, அதே நேரம் Samsung Galaxy S22+ ஃபோனின் விலை இந்தியாவில் ரூ.84,999-க்கு தொடங்குகிறது. Samsung Galaxy S22 Ultra ஆரம்ப விலை ரூ.1,34,999 ஆக உள்ளது. சாம்சங்கின் ஃபோல்டிங் ஸ்மார்ட் ஃபோன்களான Galaxy Z Fold 3 மற்றும் Galaxy Z Flip 3 ஆகியவற்றின் விலைகள் முறையே ரூ.1,49,999 மற்றும் ரூ.84,999-க்கு தொடங்குகின்றன.

Also see... இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது 5G..! அதிவேக இணையம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

இந்த ஸ்மார்ட் ஃபோன்களை நீங்கள் வாங்க நினைத்தால் இப்போது இந்த விலைகளை 24 சம தவணைகளில் பிரித்து செலுத்தலாம். இந்த புதிய சலுகை குறித்து பேசியுள்ள சாம்சங் இந்தியாவின் மூத்த இயக்குநரான ஆதித்யா, "எங்களின் பிரீமியம் Galaxy S22 சீரிஸ், Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றில் முன் எப்போதும் இல்லாத 24 மாத EMI சலுகையை HDFC வங்கியுடன் சேர்ந்து அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆஃபர் சாம்சங்கின் சமீபத்திய தொழில்நுட்பத்தை அதிக வாடிக்கையாளர்கள் அனுபவிக்க உதவுவதோடு, எங்களின் ஃபிளாக்ஷிப் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களுக்கான புதிய தேவையை அதிகரிக்க உதவும்" என்றார்.

24 மாத நோ-காஸ்ட் EMI சலுகையுடன் கூடுதல் ஆஃபராக Galaxy S22 Ultra-ஐ வாங்கும் யூஸர்கள் Galaxy Watch 4-ஐ அதன் முழு விலைக்கு பதில் ரூ.2,999க்கு பெறலாம். மேலும் Galaxy S22+ அல்லது Galaxy S22-ஐ வாங்குபவர்கள் Galaxy Buds 2-ஐ அதன் முழு விலைக்கு பதிலாக ரூ.2,999-க்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: EMI, Mobile phone, Samsung