சாம்சங் ஆண்டுவிழா கொண்டாட்டம்...ஸ்மார்ட்போன்களுக்கு 60% வரை தள்ளுபடி...!

அக்டோபர் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனை சாம்சங் ஆன்லைன் தளத்தில் நடைபெற்று வருகிறது.

சாம்சங் ஆண்டுவிழா கொண்டாட்டம்...ஸ்மார்ட்போன்களுக்கு 60% வரை தள்ளுபடி...!
சாம்சங் ஆஃபர்
  • News18
  • Last Updated: October 10, 2019, 4:49 PM IST
  • Share this:
சாம்சங் ஆண்டுவிழா கொண்டாட்டத்தையொட்டி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது.

ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்லாது டிவி, ஹெட்போன், ஆடியோ சாதனங்கள், வீட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துக்கும் தள்ளுபடி உள்ளது. அக்டோபர் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனை சாம்சங் ஆன்லைன் தளத்தில் நடைபெற்று வருகிறது.

எஸ்பிஐ, HDFC, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கார்டு பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி உள்ளது. அமேசான் பே மூலம் செலுத்தினால் கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனைக் காலத்தில் சாம்சங் கேலக்ஸி S9. 29,999 ரூபாயில் விற்பனைக்கு உள்ளது.


சாம்சங் கேலக்ஸி நோட் 9 விலை குறைக்கப்பட்டு 42,999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. சாம்சங் ஃப்ரேம் டிவி 84,999 ரூபாயில் உள்ளது. ஸ்மார்ட் வாட்ச்-களுக்கு 20 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியும் UHD மற்றும் HD டிவி-களுக்கு 49 சதவிகிதம் வரையிலும் ஆடியோ சாதனங்களுக்கு 61 சதவிகித தள்ளுபடியும் உள்ளது.

மேலும் பார்க்க: தீபாவளிக்காக மீண்டும் தொடங்குகிறது அமேசான் தள்ளுபடி விற்பனை..!

சென்னை வந்தடைந்த சீன அதிபரின் பிரத்யேக கார்...!
First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading