ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சலுகை விலையில் கிடைக்கும் Samsung galaxy S22+ - முழு விவரமும் இதோ..!

சலுகை விலையில் கிடைக்கும் Samsung galaxy S22+ - முழு விவரமும் இதோ..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோன் 84,999 ரூபாய்க்கு விற்கப்பட்டு தற்போது பிளிப்கார்ட் அளித்துள்ள சலுகை விலையில் கிட்டத்தட்ட 25,000 வரை விலை குறைக்கப்பட்டு 60000 விற்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிலிப்கார்ட்டின் ஆண்டு இறுதியில் அளிக்கப்படும் சலுகைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கிறது அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 22+ (Samsung galaxy S22+) ப்ளஸ் மாடல் ஸ்மார்ட்ஃபோன் சலுகை விலையில் தற்போது பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கிறது .

ஆனால் சாம்சங் கேலக்ஸி எஸ் 22 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன் அதன் விலைகேற்ப தரமானதாக இருக்குமா என்று கேள்வி பலரிடம் இருந்து வருகிறது. ஏனெனில் சமீப காலமாக சாம்சங் மொபைல்கள் மீதான ஆர்வம் மக்களிடையே ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. அதிலும் அவர்கள் நிர்ணயிக்கும் அதே விலைக்கு அதைவிட கூடுதல் வசதிகளுடன் தரமான ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் வந்து விட்டன.

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 ப்ளஸ் சாம்சங் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ( Flagship) மொபைல் என விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் உண்மையான சந்தை விலை 85,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இப்போது சலுகை விலையில் 60,000 க்கும் குறைவாக பிளிப்கார்ட் இணையதளத்தில் வாடிக்கையாளர்களால் இதனை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அந்நிறுவனம் இந்த சலுகை விலை எப்போதும் முடியும் என்பதை பற்றி எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Read More : அடக்கமான விலை.. அட்டகாசமான வசதிகள்.. ரியல்மி அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட்போன்..!

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 ப்ளஸ் மாடல் வாங்க முடிவு செய்து இருந்தால் அந்த போனின் அம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம்

8 GB RAM + 128 GB ROM மெமரியை கொண்டுள்ள இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோன் 84,999 ரூபாய்க்கு ஆரம்பத்தில் விற்கப்பட்டு வந்தது. தற்போது பிளிப்கார்ட் அளித்துள்ள சலுகை விலையில் கிட்டத்தட்ட 25,000 வரை விலை குறைக்கப்பட்டு 60000 விற்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 5000 வரை அந்தந்த வங்கியினை பொருத்து வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்களால் 55,000 கூட இந்த ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ள முடியும். இதைத் தவிர எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடப்பதால் உண்மை விலையை விட பாதிக்கும் குறைவான விலையில் உங்களால் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 ப்ளஸ் மாடல் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான சாம்சங்கின் பிளாக்ஷிப் மொபைல் ஆகும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்ஃபோன் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அதன் உண்மை விலையை விட பாதிக்கும் குறைவான விலைக்கு கிடைக்கிறது. மேலும் தற்போதுள்ள ஸ்மார்ட்ஃபோன்களில் மிகச்சிறந்த கேமராக்கள் உடைய ஸ்மார்ட்ஃபோன்களை பட்டியலிட்டால், அதில் இந்த ஸ்மார்ட்போனும் இடம் பிடிக்கும். தரமான புகைப்படங்கள் எடுப்பதற்கும், வீடியோக்கள் எடுப்பதற்கும், மேலும் இன்ஸ்டாகிராம் யூடியூப் கிரியேட்டர்களுக்கும் இந்த போன் மிகவும் வசதியானதாக இருக்கும்.

பிராசஸரை பொருத்தவரை இதில் உயர்தர ஸ்னாப்டிராகின் 18 gen 1SoC பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்ஃபோனுடைய செயல் திறன் மற்றும் வேகம் மிகவும் நன்றாகவே இருக்கும். கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் எந்தவித தடங்கல்களும் இல்லாமல் அனைத்து விதமான விளையாட்டுகளையும் விளையாட முடியும். மிகவும் அதிக அளவிலான செயலிகள் பின்னணியில் இயங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே மிகவும் சிறிய அளவிலான லேகை கேமர்களால் உணர முடியும்.

இதில் 4500 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு வசதியாக 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதியும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதற்கான சார்ஜரை நீங்கள் வெளியே கடைகளில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

டிஸ்ப்ளேவை பொருத்தவரை சாம்சங் ஸ்மார்ட்போன்களுடைய டிஸ்ப்ளே தான் சந்தையில் மிக சிறந்த தரத்தை கொண்டுள்ளன. 6.6 அங்குலம் HD+ டைனமிக் அமோலெட் 2x டிஸ்ப்ளே இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் யூசர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரிப்ரெஷ் ரேட்டை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. உங்களுடைய ரிப்ரெஷ் ரேட்டை 120 hz அளவிற்கு உங்களால் உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால் அதிக செயல்திறனை பயன்படுத்தும் போது உங்களின் பேட்டரி விரைவாக குறையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதைத் தவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு ip68 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தெரியாமல் மொபைல் கை தவறி கீழே விழுந்தாலும், தண்ணீரில் போட்டு விட்டாலும் கூட உடனடியாக அதில் எந்தவித கோளாறுகளும் ஏற்படாது. இவற்றைக் கணக்கிட்டு பார்க்கும் போது, கிடைக்கும் சலுகை விலைக்கு இந்த இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது சரியான ஒரு தேர்வாக இருக்கும்.

First published:

Tags: Mobile phone, Samsung, Smartphone