ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்த இரண்டு நாடுகளால் விண்வெளியில் குவியும் குப்பைகள்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இந்த இரண்டு நாடுகளால் விண்வெளியில் குவியும் குப்பைகள்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இந்த இரண்டு நாடுகளால் விண்வெளியில் குவியும் குப்பைகள்

இந்த இரண்டு நாடுகளால் விண்வெளியில் குவியும் குப்பைகள்

விண்வெளியில் மிதக்கும் செயற்கைகோள்களை பூமியில் இருந்தே தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் செய்துள்ளன.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பூமியில் தொழிற்சாலைகள், வாகனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை பெருமளவில் உருவாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது போதாது என தற்போது விண்வெளியை குப்பைத் தொட்டியாக மாற்றி வருகிறோம். பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, ஆயுத உற்பத்தி, மருந்துகள் கண்டுபிடிப்பு, அணு ஆயுதம் போன்றவற்றில் நாடுகளிலுக்குள் நீடித்து வந்த போட்டா, போட்டி தற்போது விண்வெளியை பாழாக்கி வருகிறது.

  விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் உலக நாடுகள் பலவும் செயற்கை கோள்கள், ராக்கெட்டுக்கள், ஆயுத சோதனைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. இதனால் உடைந்த செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் என விண்வெளியில் ஒரு பெரிய சைஸ் குப்பை தொட்டியே நமது தலைக்குள் மிதந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆண்டுதோறும் அதிக ராக்கெட்டுகள் மற்றும் செயற்கை கோள்கள் ஏவுவதால் உண்டாகும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

  ஆர்பிடல் டிப்ரிஸ் குவாட்டர்லி நியூஸ் (Orbital Debris Quarterly News) நிறுவனம் வெளியிட்டுள்ள நாசவின் தரவுகளின்படி, பெரும்பாலான விண்வெளி குப்பைகள் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா 7,032 துண்டு கழிவுகளையும், அமெரிக்கா 5,216 மற்றும் சீனாவும் 3,854 துண்டு கழிவுகளையும் விண்வெளியில் மிதக்கவிட்டுள்ளது. விண்வெளியில் இவ்வளவு கழிவுகள் இருப்பது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விண்வெளி ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு நாடுகளும் செயற்கைக்கோள் எதிர்ப்பு (ASAT) ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதே பெரும்பாலான கழிவுகள் உருவாக்கக் காரணம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

  Also Read : பூமியில் 5 பெருங்கடல்கள் இருப்பது தெரியும்... ஆறாவது கடல் எங்கு இருக்கு தெரியுமா?

  விண்வெளியில் மிதக்கும் செயற்கைகோள்களை பூமியில் இருந்தே தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் செய்துள்ளன. இந்த சோதனையின் விளைவாக அதிக அளவிலான கழிவுகள் விண்வெளியில் தேங்கியுள்ளதாக செக்யூர் வேர்ல்ட் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

  செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் செயற்கைக்கோள் எதிர்ப்பு (ASAT) ஆயுத சோதனை 1950ம் ஆண்டு முதன் முதலில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு சீனா தனது சொந்த செயற்கைகோளை தாக்கி அழித்தது. இதன் மூலமாக விண்வெளியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கழிவுகள் உருவாகின. சமீபத்தில் 2021ம் ஆண்டு ரஷ்யா தனது சொந்த செயற்கைக்கோளை தாக்கி அழித்தது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த குழுவினருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியது உலக நாடுகள் இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

  Also Read : விண்வெளி குப்பைகளை 5 ஆண்டுக்குள் நீக்க அமெரிக்காவின் புதிய திட்டம்!

  விண்வெளியில் உள்ள மிதக்கும் குப்பைகளை அகற்ற பல வழிகள் பரிந்துரைக்கப்பட்ட போதும், சர்வதேச அளவிலான அரசியல் தாக்கம் மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் பணி தோல்வி அடைந்தால், அதிக அளவிலான கழிவுகள் விண்வெளியில் சேரக்கூடும் என்ற அச்சமும் தடைக்கல்லாக அமைந்துள்ளது.

  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) ஆய்வாளர்கள், செயற்கைக்கோள்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகளின் உடைந்த மற்றும் செயலிழந்த பாகங்களிலும் தகவல்கள் இருக்கக்கூடும் என்பதால், அந்தந்த நாடுகள் தங்களது விண்வெளி ஆராய்ச்சியால் உருவான கழிவுகளை அகற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

  எதிர்காலத்தில் விண்வெளியில் மிதக்கும் கழிவுகளை அகற்ற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் க்ளியர்ஸ்பேஸ்-1 மற்றும் ஜப்பானிய கமர்ஷியல் ரிமூவல் ஆஃப் டிப்ரிஸ் டெமான்ஸ்ட்ரேஷன் (CRD2) ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: America, Russia