• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ரூ. 1000-க்குள் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் பிராட்பேண்ட் இன்டர்நெட் பிளான்கள்!

ரூ. 1000-க்குள் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் பிராட்பேண்ட் இன்டர்நெட் பிளான்கள்!

 ரீசார்ஜ் பிளான்ஸ்

ரீசார்ஜ் பிளான்ஸ்

ஏர்டெல்லின் இந்த பிராட்பேண்ட் பிளானை எடுக்கும் யூஸர்கள் 200 Mbps வேகத்திலான அன்லிமிட்டட் டேட்டா மற்றும் அன்லிமிட்டட் யூசேஜை பெறலாம்.

  • Share this:
பெருந்தொற்று காரணமாக பல மாதங்களாக ஏராளமானவர்க வீட்டிலிருந்தே வேலைகளை செய்து முடிக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு மாறி இருக்கிறார்கள். அதே போல பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் இன்னும் ஆன்லைனில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஸ்பீடுடன் கூடிய இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் பட்ஜெட் விலையில் அடங்க கூடிய பிளான்களை பலரும் தேடி வருகின்றனர். ஏர்டெல் ஜியோ ஃபைபர், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நாடு முழுவதும் பிராட்பேண்ட் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிறுவனங்களில் பலர் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன்களை வழங்கி வருகிறார்கள். முன்பை போல இல்லாமல் புறநகர் பகுதிகள் மற்றும் சில கிராமப்புற பகுதிகளுக்கும் கூட பிராட்பேண்ட் அணுகல் பரவலாக கிடைக்கும் காரணத்தால், தங்களுக்கு ஏற்ற பிளான்களை ஹெர்வு செய்ய மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் காணப்படுகிறது. வீட்டில் பல யூஸர்கள் மற்றும் டிவைஸ்கள் இருந்தால் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். மாதம் ஒன்றுக்கு ரூ.1000-க்கும் குறைவான கட்டணத்தில் ஏர்டெல், ஜியோஃபைபர், பிஎஸ்என்எல் மற்றும் சில நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் பிராட்பேண்ட் ஸ்கீம்களை பார்க்கலாம்.

ரூ.999 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்:

இந்த ஜியோ ஃபைபர் பிளானானது டேட்டா லிமிட் இன்றி 150 Mbps வரை டவுன்லோட் ஸ்பீடை யூஸர்களுக்கு தருகிறது. மேலும் இந்த பிளானை எடுக்கும் யூஸர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய OTT சேவைகளுக்கான அணுகலை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர நெட்ஃபிக்ஸ், ஜீ 5, சோனி லிவ், ஆல்ட் பாலாஜி, வூட் செலக்ட், ஈரோஸ் நவ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 15 ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு அணுகலை வழங்கும் அதிக விலை திட்டங்களையும் ஜியோ வழங்கி வருகிறது.

ரூ.999 ஏர்டெல் பிராட்பேண்ட் பிளான்:

ஏர்டெல்லின் இந்த பிராட்பேண்ட் பிளானை எடுக்கும் யூஸர்கள் 200 Mbps வேகத்திலான அன்லிமிட்டட் டேட்டா மற்றும் அன்லிமிட்டட் யூசேஜை பெறலாம். இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் என்டர்டெயின்மென்ட் பிராட்பேண்ட் திட்டத்திற்கானது. பிராட்பேண்ட் இணைப்பைத் தவிர, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர் உடன் ஒரு வருடத்திற்கான அமேசான் ப்ரைமை அணுக முடியும். தேவைக்கேற்ப திரைப்படங்கள் அல்லது ஷோக்களை பார்ப்பதற்கு வசதியாக யூஸர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்சிற்கான அணுகலையும் பெறலாம்.

Also read... வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாக உள்ள புதிய அப்டேட்டுகள் - முழு விவரம்!

ரூ.999 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பிளான்:

BSNL வழங்கும் இந்த பிராட்பேண்ட் பிளான் 200 Mbps ஸ்பீடை கொண்டிருந்தாலும், மற்ற நிறுவனங்கள் வழங்கும் அன்லிமிட்டட் டேட்டாவை போலல்லாமல் 3.3 TB டேட்டா லிமிட்டை கொண்டுள்ளது. இந்த லிமிட்டை நீங்கள் தாண்டி விட்டால் 200 Mbps ஸ்பீடிற்கு பதிலாக 2 Mbps ஸ்பீடில் கனெக்ஷன் வேலை செய்யும். இந்த பிளான் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இலவச பிரீமியம் சந்தாவுடன் வருகிறது. இது தவிர பிராட்பேண்ட் யூஸர்களுக்கு மாதம் ரூ.129-க்கு ஸ்ட்ரீமிங் வசதிகளை வழங்க YuppTV உடன் BSNL கூட்டு சேர்ந்துள்ளது. சினிமா பிளஸ் என்ற பிளான் YuppTV, Zee5, SonyLIV மற்றும் Voot உள்ளிட்ட நான்கு OTT சந்தாக்களை வழங்குகிறது

ரூ.950 டாடா ஸ்கை பிராட்பேண்ட் பிளான்:

ரூ.950 விலையில் ஒரு மாதத்திற்கு 100 Mbps ஸ்பீடில் இன்டர்நெட் கனக்ஷனை டாடா ஸ்கை வழங்கினாலும், இந்த பிளானுடன் கூடுதலாக எந்த ஸ்ட்ரீமிங் சேவைகளையும் வழங்கவில்லை. இந்த பிளானை 3 மாதத்திற்கானதாக எடுத்தால் ரூ.900, 6 மாதங்களுக்கு எடுத்தால் ரூ.750, வருடத்திற்கு ரூ.700 என்ற கட்டணத்தின்படி முறையே ரூ.2,700, ரூ.4,500 மற்றும் ரூ.8,400 என்ற சலுகை விலையை பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: