மடிக்கலாம்... விரிக்கலாம்... வாய்பிளக்க வைத்த Royole ஸ்மார்ட்ஃபோன்!

மார்ச் இறுதியில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இதனது விலை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: January 11, 2019, 1:17 PM IST
மடிக்கலாம்... விரிக்கலாம்... வாய்பிளக்க வைத்த Royole ஸ்மார்ட்ஃபோன்!
மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்ஃபோன்
Web Desk | news18
Updated: January 11, 2019, 1:17 PM IST
அமெரிக்காவில் நடைபெற்று வரும் CES 2019 கண்காட்சியில் புதிய மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்ஃபோனை Royole அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தாண்டு நிச்சயமாக மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்ஃபோன் வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த வகையில் சாம்சங், எல்ஜி ஆகிய நிறுவனங்களை எதிர்பார்த்துக்கிடந்த டெக் உலகம் Royole கொடுத்த சர்ப்ரைஸில் ஆச்சர்யம் அடைந்துள்ளது. 2018-ம் ஆண்டு சீனாவில் முதன்முறையாக Royole மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்தது.


ஆனால், 2019-ம் ஆண்டில் தான் வணிக ரீதியான விற்பனையைத் தொடங்கும் என Royole அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனையை அமெரிக்காவில் இருந்து தொடங்க உள்ளது Royole.

மார்ச் இறுதியில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இதனது விலை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: கூட்டணியில் வாஜ்பாய் வழியை பின்பற்றுகிறாரா மோடி? - அரசியல் ஆரம்பம்

Loading...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...