உலகத்தரத்திலான ஜியோ 5 ஜி சேவை - முகேஷ் அம்பானி அறிவிப்பு

RIL AGM 2020 LIVE Updates | கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது.

உலகத்தரத்திலான ஜியோ 5 ஜி சேவை - முகேஷ் அம்பானி அறிவிப்பு
முகேஷ் அம்பானி
  • News18
  • Last Updated: July 15, 2020, 2:39 PM IST
  • Share this:
எண்ணெய், தொலைதொடர்புத்துறை, சில்லறை வர்த்தகத் துறைகளில் முன்னணி நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கொரோனா காலத்திற்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.


பேஸ்புக் உள்ளிட்ட மிக முக்கிய நிறுவனங்கள் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இதன் மூலம், குறுகிய காலத்தில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்த நிறுவனமாக ஜியோ இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜியோ 5 ஜி சேவை வெகு விரைவில் தொடங்கும் என்று கூறிய முகேஷ் அம்பானி, உலகத்தரத்தில் இந்த சேவை இருக்கும் என்றார். மேலும், மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு 5 ஜி சேவைக்கு ஜியோ இயங்குதளங்கள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading