நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கு ஷேர் செய்கிறீர்களா?

பாஸ்வேர்டு ஷேர் செய்வதால் இந்த ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 1:09 PM IST
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கு ஷேர் செய்கிறீர்களா?
நெட்ஃப்ளிக்ஸ்
Web Desk | news18
Updated: January 10, 2019, 1:09 PM IST
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் அக்வுண்ட் பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கு ஷேர் செய்வோருக்கு செக் வைக்கத் தயாராகி வருகின்றன இந்நிறுவனங்கள்.

ஒரே subscription மூலம் நண்பர்கள், ஆஃபிஸ் டீம் என அனைவரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹெச்.பி.ஓ போன்ற ஆன்லைன் சேனல்களைப் பார்க்க ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுக்குள் தானே நாம் ஷேர் செய்துகொள்கிறோம். ஆனால், இப்படி செய்வதால் இந்த ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தடுக்கப் புதிதாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தத் தயாராகி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ். இதன் மூலம் பணம் செலுத்தி நெட்ஃப்ளிக்ஸ் பார்ப்போரின் watch- search history ஆராயப்படும். மேலும், இடம், லாகின் சிஸ்டம் என அனைத்தையும் இனி நெட்ஃப்ளிக்ஸ் கவனிக்கும். இதன் மூலம் விரோதமான முறையில் பாஸ்வேர்டுகள் ஷேர் செய்யப்படுவது குறையும் எனக் கருதுகிறது நெட்ஃப்ளிக்ஸ்.


மேலும் பார்க்க: உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன?
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...