Venus Fly : ஸ்மார்ட்போன் ஆப்-ஐ பயன்படுத்தி வீனஸ் ஃப்ளை செடியை கட்டுப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்!

வீனஸ் ஃப்ளை செடி

2016 ஆம் ஆண்டில், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி குழு கீரை இலைகளை சென்சார்களாக மாற்றியது. அவை நிலத்தடி நீரில் வெடிக்கும் பொருட்களைக் கண்டறியும்போது விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் எச்சரிக்கையை அனுப்பும்.

  • Share this:
சிங்கப்பூரில் ஒரு ஸ்மார்ட்போனிலிருந்து மின்சார சிக்னல்களைப் பயன்படுத்தி வீனஸ் ஃப்ளைட்ராப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ரோபாட்டிக்ஸ் முதல் தாவரங்களை சுற்றுச்சூழல் சென்சார்களாகப் பயன்படுத்துவது வரை பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு அறிய கண்டுபிடிப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முழு அளவிலான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, அசாதாரணங்கள் அல்லது சாத்தியமான நோய்கள் பற்றிய தாவரங்களிலின் சமிக்ஞைகளைக் கண்டறிய இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று NTU ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்.டி.யு) ஆராய்ச்சியாளரான லுயோ யிஃபி இந்த கண்டுபிடிப்பு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மொபைல் போனில் இருந்து வெளியாகும் சிக்னல் செடியுடன் இணைக்கப்பட்ட சிறிய மின்முனைகளுக்கு அனுப்பப்படும் போது, அவை பூச்சிகள் தன்னை நெருங்கும் போது எவ்வாறு பிடிக்குமோ, அதேபோல தனது இதழ்களை மூடிக்கொள்வதை விளக்கினார்.

ALSO READ : ராக்கெட் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் கண்ணுக்கு தெரியாத அரண்!

இதுகுறித்து பேசிய என்.டி.யுவின் ஸ்கூல் ஆஃப் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரியும் லூவோ, "தாவரங்கள் மனிதர்களைப் போன்றது. அவை நம் இதயங்களிலிருந்து ஈ.சி.ஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம்) போன்ற மின்சார சமிக்ஞைகளை உருவாக்குகின்றன. மேலும் இந்த மின்சார சமிக்ஞைகளை தாவரங்களின் மேற்பரப்பில் இருந்து அதனை சேதப்படுத்தாமல் கண்டறிய ஒரு ஆக்கிரமிப்பு அல்லாத தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று லூவோ கூறினார்.

இதேபோல, விஞ்ஞானிகள் வீனஸ் ஃப்ளைட்ராப்பின் பொறி பகுதியைப் பிரித்து அதை ஒரு ரோபோ கையில் இணைத்துள்ளனர். எனவே ஒரு சமிக்ஞை கொடுக்கப்படும் போது, கம்பி துண்டு போன்ற மெல்லிய மற்றும் லேசான எடைகொண்ட பொருட்களை ரோபோவால் பிடிக்க முடியும். இந்த வழியில், தாவரத்தை ஒரு "மென்மையான ரோபோ" ஆக பயன்படுத்தப்படலாம்.

ALSO READ : தேம்ஸ் நதியில் உலாவிய குட்டி திமிங்கலம் - என்ன நடந்தது தெரியுமா?

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், தொழில்துறை கிரிப்பர்களால் சேதமடையக்கூடிய பலவீனமான விஷயங்களை எடுக்கவும், சுற்றுச்சூழல் நட்பாகவும் இருக்க ரோபோடிக்சில் இந்த தாவரங்களை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபற்றி லூவோ தெரிவித்தாவது, "எரிவாயு, நச்சு வாயு அல்லது நீர் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கண்காணிக்க தாவரங்களை உயிருள்ள சென்சார்களாகப் பயன்படுத்துவதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறியுள்ளார். இதுபோன்ற தாவர தொழில்நுட்பத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு நீண்ட கால ஆய்வு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ : மணமகள் கையால் தாலி கட்டிக் கொண்ட மணமகன் - கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!

மேலும், மாமிச தாவரங்களின் ஆர்வலரும் எஸ்.ஜி. வீனஸ் ஃப்ளைட்ராப்பின் நிறுவனருமான டேரன் என்.ஜி. கூறுகையில், "தாவரங்கள் நம்மிடம் மீண்டும் பேச முடிந்தால், இந்த தாவரங்கள் அனைத்தையும் வளர்ப்பது இன்னும் எளிதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.இந்த ரிமோட் கண்ட்ரோல் வீனஸ் ஃப்ளைட்ராப் “ரோபோ-தாவரங்கள்” மற்றும் பயிர்கள் நோயால் பாதிக்கப்படும் போது, விவசாயிகளுக்கு அதனை தெரிவிக்கும்.

தாவரங்களுடன் தொடர்புகொள்வதற்கு ஒரு உயர் தொழில்நுட்ப முறையை உருவாக்கிய பின்னர் இது யதார்த்தமாக மாறக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் காரணமாக பயிர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் இத்தகைய தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ALSO READ : ஸ்காட்லாந்தில் கடையில் நுழைந்து டுனா சாண்ட்விச் திருடிசென்ற சீகில் பறவை : வைரலாகும் வீடியோ!

தாவரங்கள் மிகவும் பலவீனமான மின் சமிக்ஞைகளை வெளியிடுகின்றன என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். ஆனால் அவற்றின் சீரற்ற மற்றும் மெழுகு மேற்பரப்புகள் சென்சார்களை திறம்பட வெளியிடுவதை கடினமாக்குகின்றன.

2016 ஆம் ஆண்டில், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி குழு கீரை இலைகளை சென்சார்களாக மாற்றியது. அவை நிலத்தடி நீரில் வெடிக்கும் பொருட்களைக் கண்டறியும்போது விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் எச்சரிக்கையை அனுப்பும்.
Published by:Sankaravadivoo G
First published: