பார்வையில்லா மாற்றுத்திறனாளிகளும் இனி மீம்ஸ்-களை ரசிக்க முடியும்..!

சில மீம்ஸ்களுக்கு ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் alt text வசதியும் சிலவற்றுக்கு ஆடியோ வசனம் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையில்லா மாற்றுத்திறனாளிகளும் இனி மீம்ஸ்-களை ரசிக்க முடியும்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 2, 2019, 2:58 PM IST
  • Share this:
இன்றைய புதுயுகத்தில் உலக அரசியல் முதல் உள்ளூர் சினிமா வரையில் அனைத்தும் அன்றாட ட்ரெண்டிங் பட்டியலில் இணைவதற்கான முதல் காரணமாக மீம்ஸ்கள் இருக்கும்.

இந்த மீம்ஸ்கள் நாம் மட்டும் ரசித்தால் போதாது, பார்வையில்லா மாற்றுத்திறனாளிகளும் ரசிக்க வேண்டும் என புது தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் புதிய தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட்டது.

ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்வையற்றோரால் பயன்படுத்த முடியும். ஆனால், மீம்ஸ்களில் பயன்படுத்தப்படும் ஒப்புமைகள், வசனங்களை அவர்களால் உணர முடியாது. இதைத் தவிர்க்க மீம்ஸ்களில் பார்வையற்றோருக்கு உதவும் வகையில் alt text என்னும் அம்சம் இணைக்க முடியுமா என்று சோதிக்கப்பட்டது.


இது சாத்தியம் என்றாலும் சில நுணுக்கமான நகைச்சுவை அம்சங்களைப் புரிய வைக்க டெக்ஸ்ட் ஆடியோ இணைக்கும் வசதியும் ஏற்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. சில மீம்ஸ்களுக்கு ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் alt text வசதியும் சிலவற்றுக்கு ஆடியோ வசனம் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் செயலியில் வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading