செல்போனில் இருந்து சீன செயலிகளை தூக்கும் இந்திய செயலி - அதிரடி காட்டிய பிளே ஸ்டோர்

Remove China App | செல்போனில் இருந்து சீன செயலிகளை நீக்கும் இந்திய செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

செல்போனில் இருந்து சீன செயலிகளை தூக்கும் இந்திய செயலி - அதிரடி காட்டிய பிளே ஸ்டோர்
Remove China App
  • News18
  • Last Updated: June 3, 2020, 11:09 AM IST
  • Share this:
இந்தியாவிற்கும் - சீனாவுக்கும் எல்லையில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில், REMOVE CHINA APPS என்ற செயலிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஜெய்பூரைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்திருந்த இந்த செயலியில், எவையெல்லாம் சீனாவைச் சேர்ந்த செயலிகள் என்பதை நமக்கு தெரியப்படுத்தும். அதன்பின்னர் எளிதாக நம் செல்போனில் இருந்து சீன செயலிகளை DELETE செய்யும் OPTION-ஐயும் இந்த REMOVE CHINA APPS செயலி வழங்கியது.

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலியானது இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமாக கடந்த இரண்டு வாரங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மேலும், 5-க்கு 4.9 என்ற ரேட்டிங்கையும் பெற்றது.


சீனாவை மையமாக கொண்டு செயல்படும் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளை இந்த செயலி குறிவைத்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து REMOVE CHINA APPS நீக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி, மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்குவதற்கு யூசர்களை தூண்ட ஒரு செயலிக்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டிக்டாக் செயலிக்கு போட்டியாக இந்திய நிறுவனம் ஒன்று கொண்டு வந்த மித்ரோன் என்ற செயலியும், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுக்காக்க வசதி இல்லாததால் நீக்கப்பட்டதாக செய்திகள் கூறின.

Also See: சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading