ஜியோ நியூஸ் ஆப்: உங்கள் மொபைலில் செய்திகள் உடனுக்குடன்!

இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நேரலை டி.வி., வீடியோக்கள், செய்திகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

Tamilarasu J | news18
Updated: May 7, 2019, 8:13 PM IST
ஜியோ நியூஸ் ஆப்: உங்கள் மொபைலில் செய்திகள் உடனுக்குடன்!
ஜியோ நியூஸ்
Tamilarasu J | news18
Updated: May 7, 2019, 8:13 PM IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்,  ஜியோ நியூஸ் செயலியை (www.jionews.com) அறிமுகம் செய்திருக்கிறது. இந்தச் செயலியை 12-க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நேரலை டி.வி., வீடியோக்கள், செய்திகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

செய்தி சேவையின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ நியூஸ் செயலியைத் துவங்கியிருக்கிறது. இது செயலி மற்றும் இணையம் என இருவிதங்களில் கிடைக்கிறது.


ஜியோ நியூஸ் சேவையின் உடனடி செய்திகள், நேரலை டி.வி., வீடியோக்கள், நாளேடு, வார பத்திரிகை உள்ளிட்டவற்றை ஒரே தளத்தில் இயக்க முடியும். இந்தியாவில் பொதுத் தேர்தல், ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடர், உலகக் கோப்பை 2019 மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடைபெற இருக்கும் நிலையில், ஜியோ தனது நியூஸ் சேவையைத் துவங்கியிருக்கிறது.

ஜியோ நியூஸ் சேவையில் பயனர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க கிடைக்கும் சுமார் 15-க்கும் அதிக நேரலை செய்தி சேனல்கள், 800-க்கும் அதிக பத்திரிக்கைகள், 250-க்கும் அதிக நாளேடுகள், பிரபல வலைப்பக்கங்கள் மற்றும் செய்தி வலைத்தளங்களை 12-க்கும் அதிக இந்திய மொழிகளிலிருந்து தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

மேலும், பயனர் விருப்பப்படி முகப்பு பக்கத்தில் தோன்றும் தரவுகளில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வியாபாரம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, அழகியல், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், ஜோதிடம், வணிகம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் அவரவர் விரும்புவதைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

Loading...

கூடுதலாக இந்தச் சேவையில் டிரெண்டிங் வீடியோக்களையும் பார்க்கலாம். இத்துடன் வெவ்வேறு தலைப்புகளிலிருந்து சுமார் 800-க்கும் அதிக பத்திரிகைகளை வாசிக்க முடியும்.

ஜியோ நியூஸ் ஆப்=ஐ டவுண்லோட் செய்ய கிளிக் செய்க.
First published: May 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...