ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ - 5ஜி நெட்வொர்க்கை தட்டித்தூக்க மாஸ்டர் பிளான்!

பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ - 5ஜி நெட்வொர்க்கை தட்டித்தூக்க மாஸ்டர் பிளான்!

5ஜி

5ஜி

5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான உபகரணங்களுக்காக நோக்கியாவுடன் ஜியோ கைகோர்த்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், 58.65 சதவீத 5ஜி அலைக்கற்றையை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்திருந்தது. எனவே ரிலையன்ஸ் ஜியோ, நாட்டில் 5ஜி நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்த தயாராகி வருகிறது. ஜியோ இந்த மாதம் நாட்டின் 4 நகரங்களில் 5ஜி நெட்வொர்க் பீட்டா சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் பல நகரங்களுக்கு 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கவும், அதே சமயத்தில் நாடு முழுவதும் வேகமான சேவையை வழங்கவும் தயாராகி வருகிறது.

  5ஜி சேவை அறிமுகம்:

  கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த 5ஜி சேவையை வழங்குவதற்காக நெட்வொர்க் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி, 5G நெட்வொர்க் வரிசைப்படுத்தலுக்குத் தேவையான உபகரணங்களுக்காக ஜியோ நிறுவனம் முன்னணி தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பாளரான நோக்கியா மற்றும் ஸ்வீடனின் எரிக்சனுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில் தரமான 5ஜி சேவையை வழங்கும் விதமாக உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் ஜியோ நிறுவனம் கரம் கோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உபகரணங்களை (RAN) பல ஆண்டுகள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக நோக்கியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

  இதுகுறித்து நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் நம்பர் ஒன் மொபைல் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, உலகின் மிகப்பெரிய RAN (5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க்) உபகரணங்களைக் கொண்டுள்ளது.

  நோக்கியாவும் நீண்ட காலமாக இந்தியாவில் தனது முத்திரையை பதித்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் மூலமாக நோக்கியா இந்தியாவின் மூன்றாவது பெரிய மொபைல் ஆப்ரேட்டராக உருவெடுக்க உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  நோக்கியா - ஜியோ இணைவு:

  நாட்டில் 5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான உபகரணங்களுக்காக நோக்கியாவுடன் ஜியோ கைகோர்த்துள்ளது. நோக்கியா 5G ரேடியோ அணுகல் (RAN) உபகரணங்களை ஜியோவிற்கு வழங்கவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரிமோட் ரேடியோ ஹெட்கள் (RRH), பேஸ் ஸ்டேஷன்கள், அதிக திறன் கொண்ட 5G மாசிவ் MIMO ஆண்டெனாக்கள் உள்ளிட்ட உபகரணங்களை ஜியோவிற்கு வழங்க உள்ளது. மேலும் குறைவான தாமதம், நெட்வொர்க் ஸ்லைசிங் ஆகியவற்றை குறைக்கும் விதமாக 4ஜி நெட்வொர்க்குடன் இணைந்த தனித்த 5ஜி வழித்தடத்தை பயன்படுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், “இந்தியாவில் எங்கள் 5G சேவையை வலுப்படுத்துவதற்காக நோக்கியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜியோ தனது வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த நெட்வொர்க் தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதில் உறுதியாக உள்ளது. நோக்கியாவுடனான இணைவு மூலமாக இந்தியாவிற்கு உலகிலேயே மிகவும் வேகமான 5ஜி நெட்வொர்க்கை வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

  Read More: காலநிலை மாற்றத்தால் மாறும் ஆர்க்டிக் கடல்... ஒலிகளை சேகரிக்க கடலுக்குள் ஹைட்ரொபோன்கள் -புதிய ஆய்வு

   நோக்கியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெக்கா லுண்ட்மார்க் கூறுகையில், “இத்திட்டம் இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பிரீமியம் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உதவும். எங்கள் தொழில்நுட்பத்தின் மீது ரிலையன்ஸ் ஜியோ நம்பிக்கை வைத்துள்ளது குறித்து பெருமிதம் கொள்கிறோம், அவர்களுடன் நீண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான கூட்டாண்மையை எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Jio, Reliance