• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 20% கேஷ்பேக் ஆஃபர் திட்டங்கள் - ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச அறிவிப்பு!

20% கேஷ்பேக் ஆஃபர் திட்டங்கள் - ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச அறிவிப்பு!

ஜியோ

ஜியோ

2 ஜிபி டேட்டா முடிவடைந்துவிட்டால் யூசர்களின் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஸ்பீடில் இருந்து குறைந்துவிடும். 555 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்வதுடன், 100 எஸ்.எம்.எஸ்களையும் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம்.

  • Share this:
தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்கள் நெருங்கி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஜியோ (Jio) ஏற்கனவே இருக்கும் ரீசார்ஜ் (Recharge) திட்டங்களில் 20% கேஷ்பேக் ஆஃபர்களை  (Cashback Offer)அறிவித்துள்ளது.

டெலிகாம் துறையில் முன்னோடி நிறுவனமாக வளர்ந்து நிற்கும் ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு புதிய கேஷ்பேக் ஆஃபர்களை அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏற்கனவே நிலுவையில் இருக்கும் ரூ.249, ரூ.555, ரூ.599 என்ற 3 திட்டங்களுக்கு பொருந்தும். வாடிக்கையாளர்கள் ஜியோவின் கேஷ்பேக் ஆஃபர்களை பெற வேண்டும் என்றால் MyJio app மற்றும் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். நிபந்தைனைகளின்படி ரீசார்ஜ் செய்யும் யூசர்களுக்கான காஷ்பேக் அவர்களின் ஜியோ அக்கவுண்டில் இருக்கும். எதிர்வரும் காலங்களில் இந்த கேஷ்பேக்கை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதவிர, ஜியோ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் 20% கேஷ்பேக் பிரிவையும் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. ப்ரீபெய்டு யூசர்கள் இந்த பிரிவின் மூலம் எளிதாக ரீசார்ஜ் செய்து காஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம். 20% கேஷ்பேக் பிரிவில் ரூ.249, ரூ.555, ரூ.599 ஆகிய பிளான்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. 249 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. நாள் ஒன்றுக்கு 2 ஜிபி இலவச டேட்டாவும், 100 எஸ்.எம்.எஸ்களும் அனுப்பிக் கொள்ள முடியும்.

2 ஜிபி டேட்டா முடிவடைந்துவிட்டால் யூசர்களின் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஸ்பீடில் இருந்து குறைந்துவிடும். 555 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்வதுடன், 100 எஸ்.எம்.எஸ்களையும் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். 599 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தில் இதே சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் உபயோகிக்க முடியும். இந்த திட்டங்கள் அனைத்திலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட செயலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Also read... தொலைந்த ஆண்ட்ராய்டு செல்போன்களை 'ஃபைன்ட் மை டிவைஸ்' மூலம் கண்டுபிடிக்கலாம்!

ஜியோ நிறுவனம் அண்மையில் இலவச டிஸ்னி ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்சனை ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. 499 ரூபாய் மற்றும் 2,599 ரூபாய் திட்டங்களை ரீச்சார்ஜ் செய்தால், ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருவதால், ஜியோவின் இந்த சலுகை கிரிக்கெட் பிரியர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் பார்க்காத வீடுகளே இல்லை என்ற சூழல் இருப்பதால், இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி ஹாட்ஸ்டார் சந்தாவை ரீச்சார்ஜ் திட்டங்களுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்ததுபோலவே வாடிக்கையாளர்களிடமும் ஜியோவின் இந்த திட்டங்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: