• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 'ஜியோ போன் நெக்ஸ்ட்': தீபாவளி முதல் ரூ.1,999க்கு ஸ்மார்ட்போன் - ரிலையன்ஸின் அசத்தல் அறிவிப்பு!!

'ஜியோ போன் நெக்ஸ்ட்': தீபாவளி முதல் ரூ.1,999க்கு ஸ்மார்ட்போன் - ரிலையன்ஸின் அசத்தல் அறிவிப்பு!!

ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள 'ஜியோ போன் நெக்ஸ்ட்' தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.1,999 முன்பணம் செலுத்தி, பெற்றுக்கொள்ளாம். மீதி தொகையை மாதாந்திர தவணைகளில் கட்டிக்கொள்ளாலம்.

  • Share this:
    இந்த புதிய ஸ்மார்ட்போனுக்காக கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கியுள்ள பிரகதி ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. இந்த உலகின் மிக மலிவு விலை ஸ்மார்ட்போனை அருகிலுள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் சில்லறை விற்பனையகம் மூலமோ, jio.com மூலமோ அல்லது வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்புவதன் மூலமோ பெறலாம்.

    இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.6,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 18 மற்றும் 24 மாத பிளான்களை கொண்ட ஜியோ சிம் கார்டுடன் வருகிறது.


    இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கூறும்போது, கொரோனா தொற்றுநோய் பரவலால், உலகளாவிய வர்த்தகச் சங்கிலி தடைப்பட்டு இருந்த போதிலும், பெரும் சவால்களுக்கு மத்தியில் கூகுள் மற்றும் ஜியோ குழுமம் இணைந்து இந்த பெரும் திருப்புமுனை சாதனத்தை பண்டிகைக் காலத்தில் இந்திய நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    செமிகண்டக்டர்கள் பற்றாக்குறை காரணமாக, விநாயக சதுர்த்தியின் போதே வெளியிட வேண்டிய இந்த ஸ்மார்ட்போன் தற்போது தாமதமாக வெளியிடப்படுகிறது.

    தற்போது 2ஜி டெலிபோன் சேவைகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான இந்தியர்களை 4ஜி அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளை நோக்கி மாற்றும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

    இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தனது ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தி அதன் நெட்வொர்க்கில் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதற்கான இலக்கை அடைவதற்கு ஒரு வழியாகவும் இந்த போன் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது, சீன நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ரிலையஸ்க்கு என்று ஒரு தனி இடம் கிடைக்க பெறுவதையும் இந்த போன் இலக்காகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: