Home /News /technology /

அதிகரித்த டேட்டா பயன்பாடு... வேகத்தை அதிகரித்த ஜியோஃபைபர்...!

அதிகரித்த டேட்டா பயன்பாடு... வேகத்தை அதிகரித்த ஜியோஃபைபர்...!

ஜியோ

ஜியோ

100 MBPS என்ற அளவில் தொடங்கி 1 GB வரையிலான உண்மையிலேயே அதிவேக பிராட்பேண்டு சேவைகள் வழங்கப்படுகின்றன

  • News18
  • Last Updated :
    நெருக்கடியான இந்த காலகட்டத்தில் உயர்வேக பிராட்பேண்டு சேவை உடன் பயனாளிகளை தொடர்ந்து இணைப்பில் இருப்பதை உறுதிசெய்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் ஜியோஃபைபர் எடுத்திருக்கிறது.

    தமிழ்நாட்டின் பெரிய நகரங்களின் முக்கியமான பகுதிகளில் இச்சேவைகள் கிடைக்குமாறு செய்வதற்கு தனது கவரேஜை பெருக்கி வருவதற்கும், கூடுதலாக இந்நடவடிக்கைகளை ஜியோ ஃபைபர் மேற்கொள்கிறது.

    கோவிட்-19 வைரஸ் தொற்றுப்பரவல் மற்றும் ஊரடங்கு அமலாக்கம் செய்யப்பட்டு வரும்நடப்பு சூழலில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் வீட்டிலிருந்து தங்களது அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, சேலம், நாகர்கோவில், தர்மபுரி, ராஜபாளையம், ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், விருதாச்சலம், தூத்துக்குடி, சிதம்பரம், மன்னார்குடி மற்றும் வேலூர் போன்ற நகரங்களின் முக்கியமான குடியிருப்பு பகுதிகளில் தனது நம்பகமான உயர்வேக பிராட்பேண்டு சேவைகளைக் கொண்டு மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக தனது வலையமைப்பை ஜியோஃபைபர் இன்னும் வலுவாக உயர்த்தியிருக்கிறது.

    அதுமட்டுமன்றி முழுமையான இந்த ஊரடங்கு அமலாக்க காலத்தின்போது வாடிக்கையாளர்களின் அதிகரித்துவரும் டேட்டா பயன்பாடு தேவைகளை கருத்தில்கொண்டு ஏற்கனவே இருக்கின்ற ஜியோ ஃபைபர் பயனாளிகள் அனைவருக்கும் இருமடங்கு டேட்டா
    வசதியினை ஜியோஃபைபர் வழங்கி வருகிறது.

    ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் தற்போதைய சிரமமான காலகட்டத்திலும் கூட ஜியோஃபைபர் குழுவால் வழங்கப்பட்டு வரும் விரைவான சேவைகள் மற்றும் இணைப்புவசதி நிறுவல்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஜியோஃபைபர்
    வாடிக்கையாளர்களை பெருமகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

    இம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஜியோஃ பைபர் அதிவேக பிராட்பேண்டு சேவைகள் தற்போது சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, சேலம், நாகர்கோவில், தர்மபுரி, ராஜபாளையம், ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், விருதாச்சலம், தூத்துக்குடி, சிதம்பரம், மன்னார்குடி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்றன.

    இம்மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் ஜியோஃபைபரரின் அதிவேக பிராட்பேண்டு சேவைகள் விரைவாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. 100 MBPS என்ற அளவில் தொடங்கி 1 GB வரையிலான உண்மையிலேயே அதிவேக பிராட்பேண்டு சேவைகளை வழங்குகின்ற ஜியோஃபைபர் தனிப்பட்ட வீடுகளிலிருந்து சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முறை பணியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை தொடர்ந்து வழங்கிவருகிறது.
    Published by:Sankar
    First published:

    Tags: Jio Fiber

    அடுத்த செய்தி