• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 30Mbps முதல் 1Gbps வரை இணைய வேகத்தை வழங்கும் ஜியோ ஃபைபரின் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் பிளான்ஸ்!

30Mbps முதல் 1Gbps வரை இணைய வேகத்தை வழங்கும் ஜியோ ஃபைபரின் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் பிளான்ஸ்!

ஜியோ

ஜியோ

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் போஸ்ட்பெய்ட் 6 மாத பில்லிங் பிளான்: அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களும் அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு மற்றும் இலவச அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் கால்ஸ், வயர்லைன் தொலைபேசி ஆகியவற்றை வழங்குகின்றன.

  • Share this:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்காக, ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களை, ப்ரீபெய்ட் பில்லிங் திட்டங்களுக்கு கூடுதல் விருப்பமாக வெளியிட்டது. இந்த திட்டங்கள் இப்போது 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வாலிடிட்டி என ஒரே பேமெண்ட் விருப்பத்துடன் கிடைக்கிறது. பல பிராட்பேண்ட் நெட்ஒர்க்குகளுக்கு இடையில் போட்டி கடுமையாக இருப்பதால், புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த கூடுதல் பில் பிளான் விருப்பங்களையும் ஜியோஃபைபர் வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் மற்றும் டாடா ஸ்கை பிராட்பேண்ட், ACT ஃபைபர்நெட் உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் அவதாரத்தில் திட்டங்களை வழங்கினாலும் நீண்ட கால பில்லிங் திட்டங்களையே வழங்கி வருகின்றனர். மேலும் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்கள் அனைத்தும் 30Mbps மற்றும் 1Gbps இடையிலான சமச்சீர் பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்குகின்றன.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட் போஸ்ட்பெய்ட் 3 மாத பில்லிங் பிளான்: சமீபத்தில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் போஸ்ட்பெய்ட் பில் திட்டங்கள் காலாண்டு கட்டண விருப்பத்துடன் உங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை சேர்த்துள்ளது. இந்த பிரிவில் உள்ள ஜியோ ஃபைபர் திட்டங்கள் 100 Mbps வேகத்தில் தொடங்கி இணைய வசதியை வழங்குகின்றன. இந்த 100Mbps திட்டத்தை 3 மாதங்களுக்கு பெற ரூ. 2097 செலவாகும். அதே நேரத்தில் நீங்கள் 150Mbps வேகத்திற்கு ரூ. 2997 செலவிட நேரிடும். இதையடுத்து 300Mbps வேகத்திற்கு ரூ. 4497, 500Mbps வேகத்திற்கு ரூ.7497 மற்றும் 1Gbps வேகத்திற்கு ரூ.11997 செலுத்த வேண்டும். அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் டேட்டாவை உங்களுக்கு வழங்குகின்றன. நீங்கள் மேற்கண்டவற்றில் எந்த பில்லிங் திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் மற்றும் பலவற்றிற்கான தொகுக்கப்பட்ட சந்தாக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் போஸ்ட்பெய்ட் 6 மாத பில்லிங் பிளான்: அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களும் அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு மற்றும் இலவச அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் கால்ஸ், வயர்லைன் தொலைபேசி ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் சமச்சீர் வேகத்தை வழங்குகின்றன. அதாவது நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம் கிடைக்கும். நீங்கள் 6 மாத பில்லிங் விருப்பத்தை தேர்வு செய்தால், 30Mbps பிராட்பேண்ட் திட்டத்திற்கு ரூ .2394 செலுத்த வேண்டும். அதுவே 100 Mbps திட்டத்திற்கு ரூ .4194 செலுத்த வேண்டும். அதுவே 6 மாத காலத்திற்கு நீங்கள் 150 Mbps திட்டத்தை தேர்வு செய்தால் அதற்கு ரூ.5994 செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இந்த பில்லிங் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி, சோனி லிவ், ஜீ 5, சன் என்எக்ஸ்டி, வூட் செலக்ட், வூட் கிட்ஸ், ஆல்ட்பாலாஜி, ஹோய்சோய், ஷெமரூமீ, லயன்ஸ் கேட், டிஸ்கவரி+, ஈரோஸ் , ஜியோ சினிமா மற்றும் ஜியோசாவ்ன் ஆகியவற்றிற்கான அணுகல்களை பெறலாம். இதுதவிர, அதிக வேக இணைய வசதியை வழங்கும் பில்லிங் பிளான் நெட்ஃபிக்ஸ் சந்தாவையும் கூடுதலாக வழங்குகின்றன. அதன்படி 6 மாதங்களுக்கு 300 Mbps வேகத்தை வழங்கும் திட்டத்திற்கு ரூ.8994 செலவாகும். 500 Mbps வேகத்தை வழங்கும் 6 மாத திட்டத்திற்கு ரூ .14994 செலவாகும் மற்றும் அதே காலத்திற்கு 1 Gbps வேகத்தை வழங்கும் திட்டத்திற்கு ரூ.23994 செலவாகும்.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட் போஸ்ட்பெய்ட் 12 மாத பில்லிங் பிளான்: ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு நீங்கள் ஆண்டுதோறும் பணம் செலுத்த விரும்பினால், நீங்கள் 12 மாத பில்லிங் திட்டத்தை தேர்வு செய்யலாம். இதில் 12 மாதங்களுக்கு 30Mbps வேகத்தை வழங்கும் திட்டத்திற்கு ரூ.4788 செலுத்த வேண்டியிருக்கும். அதுவே 100Mbps வேகத்தை வழங்கும் திட்டத்திற்கு ரூ.8388, 150Mbps திட்டத்திற்கு ரூ .11988, 300Mbps திட்டத்திற்கு ரூ.17988, 500Mbps திட்டத்திற்கு ரூ 29988 மற்றும் 1Gbps பிராட்பேண்டிற்கு ரூ .47988-யும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டங்கள் அதே வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாட்டு சந்தா பண்டில்கள் மற்றும் அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு மற்றும் இலவச லோக்கல் மற்றும் நேஷனல் வாய்ஸ் கால்ஸ் போன்றவற்றை வழங்குகின்றன.

Also read... Whatsapp-ல் உங்கள் லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ், ப்ரொஃபைல் பிக்ச்சரை யார் பார்க்கலாம் என நீங்களே தேர்வு செய்யலாம்!

6 மாதங்கள் மற்றும் வருடாந்திர போஸ்ட்பெய்ட் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் இரண்டும், 30 நாட்கள் வாலிடிட்டியுடன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் சந்தாக்களுக்கான அணுகல்கள் வழங்கும் ப்ரீபெய்டு திட்டங்களை அப்படியே பிரதிபலித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: