Reliance Jio, Airtel, Vi நெட்ஒர்க்குகளில் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் - முழு விவரம்!

Reliance Jio, Airtel, Vi நெட்ஒர்க்குகளில் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் - முழு விவரம்!

மாதிரி படம்

பல ரீசார்ஜ் பிளான்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் முன்னணி நெட்ஒர்க் நிறுவனங்களான Reliance Jio, Airtel, Vi ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. அதில் பல ரீசார்ஜ் பிளான்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. இந்த திட்டங்களில் சில OTT சேவைக்கு இலவச சந்தா மற்றும் சில தளங்களுக்கு இலவச உறுப்பினர் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.

மேலும் சில ரீசார்ஜ் திட்டங்கள் வீக்எண்ட் டேட்டா ரோல்ஓவர் செயல்பாட்டையும் வழங்குகின்றன. அதாவது வாரம் முழுக்க பயன்படுத்தாத டேட்டாவை சேர்த்து வைத்து அதனை வார இறுதியில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும் Reliance Jio, Airtel, Vi நெட்ஒர்க்குகளின் ரீசார்ஜ் பிளான்களை குறித்து காண்போம்.

ஜியோ ரூ.599, ஏர்டெல் ரூ.599 மற்றும் விஐ ரூ.595 ரீசார்ஜ் பிளான்:

ரிலையன்ஸ் ஜியோ நெட்ஒர்க்: தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இதன் வாலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன் பொருள் வாடிக்கையாளர்கள் மொத்தம் 168 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். மேலும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்-ஐ இலவசமாக பெறலாம். இதுதவிர ஜியோ டிவி மற்றும் பல ஆப்களின் ஜியோ தொகுப்பிற்கு ஒரு காம்ப்ளிமெண்ட்ரி சந்தாவும் இதனுடன் கிடைக்கிறது.

ஏர்டெல்: ரூ.599 ப்ரீபெய்ட் பேக் மூலம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பெறலாம். இதன் வாலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் இதனுடன் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ். மற்றும் கூடுதல் நன்மையாக ஒரு வருட இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஆகியவையும் கிடைக்கும். இது ஒரு பிரைம் வீடியோ சந்தா மொபைல் வெர்சனை 30 நாட்கள் இலவச ட்ரையலுடன் வழங்குகிறது. இந்த திட்டம் இலவச HelloTunes மற்றும் இலவச WynkMusic மற்றும் Airtel XStream பிரீமியத்திற்கான அணுகலையும் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா (Vi): ரூ.595 பேக்கின் வாலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இந்த பேக்கில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு ZEE5 சந்தா அணுகலுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பெறலாம். இது வீக்எண்டு டேட்டா ரோல்ஓவர் அம்சத்தையும் வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வார இறுதியில் தங்கள் மொபைலில் அதிக நிகழ்ச்சிகளை தாராளமாகவும் அதிவேக இன்டர்நெட் வசதியுடனும் பார்க்கலாம். இந்தத் திட்டம் Vi திரைப்படங்கள் மற்றும் டிவி கிளாசிக்ஸ்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.444, ஏர்டெல் ரூ.449 மற்றும் விஐ ரூ.449 ரீசார்ஜ் பிளான்:

ரிலையன்ஸ் ஜியோ: ரூ.444 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக்கின் வாலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதன்படி மொத்தம் 112 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ ஆப்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.

ஏர்டெல்: ரூ.449 திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பெறலாம். மேலும் இதன் வாலிடிட்டி 56 நாட்கள் ஆகும். கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச HelloTunes மற்றும் Wynk Music சந்தாவும் கிடைக்கிறது. மேலும் பிரைம் வீடியோவின் மொபைல் வெர்சனுக்கு 30 நாள் இலவச ட்ரையலை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா: ரூ.449 திட்டத்தின் வாலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த கட்டத்தில், ரூ 449 திட்டம் Vi வாடிக்கையாளர்களுக்கு டூயல் டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இதன் பொருள் இந்த திட்டம் தற்போது ஒரு நாளைக்கு 4 ஜிபி தரவை வழங்குகிறது. Vi ப்ரோமோஷனல் டூயல் டேட்டா எப்போது இயக்கும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதுதவிர இந்த பிளான் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வீக்எண்ட் டேட்டா ரோல்ஓவர் அம்சத்தையும் வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மேலும் சில ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ: ஜியோ வழங்கும் ரூ.598-க்கான ரீசார்ஜ் திட்டம் சுமார் 56 நாட்கள் வாலிடிட்டியுடன் வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. இருப்பினும், இது ரூ.599 பேக்குடன் அனைத்து அம்சங்களிலும் மிகவும் ஒத்துப்போகிறது. இருப்பினும் ஒரே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அது என்னவென்றால் இந்த பேக் ரூ.399 மதிப்புள்ள இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. இதுதவிர இந்த திட்டம் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

Also read... Netflix -ஐ இலவசமாக பயன்படுத்த சூப்பரான ஐடியா - ஜியோ முதல் வோடாஃபோன் Vi வரை பெஸ்ட் பிளான்கள்!

ஏர்டெல்: ரூ.698 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை 84 நாட்கள் வாலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த பேக் ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்ஸ் வசதியை வழங்குகிறது. மேலும் பிரைம் வீடியோவின் மொபைல் வெர்சனை வாடிக்கையாளர்களுக்கு 30 நாள் இலவச ட்ரையலுடன் வழங்குகிறது. இதுதவிர இலவச HelloTunes மற்றும் Wynk Music ஸ்ட்ரீமிங் ஆப்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.

Vi : வோடபோன் ஐடியாவின் ரூ.795 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு இலவச ZEE5 பிரீமியம் அணுகலையும் மற்றும் வீக்எண்ட் டேட்டா ரோல்ஓவர் அம்சத்தையும் வழங்குகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: