ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

தொலைத்தொடர்பு சேவையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ரிலையன்ஸ் ஜியோ: நன்றி தெரிவித்த நிறுவனம்!

தொலைத்தொடர்பு சேவையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ரிலையன்ஸ் ஜியோ: நன்றி தெரிவித்த நிறுவனம்!

ஜியோ

ஜியோ

இந்தியாவை 2G-mukt -ஆக (இலவச 2 ஜி இன்டர்நெட்) மாற்றுவதற்கும் மற்றும் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதற்கான தனது குறிக்கோளை நிறுவனம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் ஐந்தாவது ஆண்டு நிறைவை வெற்றிகரமாக கொண்டாடி வருகிறது. ஜியோவின் வளர்ச்சிக் குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் செய்தி வெளியிட்ட நிறுவனம், நாட்டில் டிஜிட்டல் புரட்சியை கொண்டு வந்ததற்காக ஜியோவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது. மேலும் ரிலையன்ஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, ஜியோ-வுக்கு ஆதரவு அளித்த யூசர்களுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தது.

மேலும் இந்தியாவில் இணைய புரட்சியை உருவாக்கியதற்காக பல தொழில்நுட்ப நிறுவனங்களும் ரிலையன்ஸ் ஜியோவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, ஜியோ, இந்திய டெல்கோ சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. மேலும் தற்போது டிராய் தரவுகளின்படி, 2021ம் ஆண்டு ஜூன் வரை மொபைல் மற்றும் பிராட்பேண்ட் பிரிவுகளில் மிகப்பெரிய சந்தைப் பங்கை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அந்த ட்விட்டர் பதிவில் ஜியோ நிறுவனம் ஒரு வீடியோ டீசரையும் இணைத்துள்ளது. அந்த வீடியோவில், 1995ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆரம்பமான டிஜிட்டல் புரட்சி குறித்து விவரித்துள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அவை இணைய சேவையில் நிறுவனத்திற்கு அளித்த பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் அதிவேக இணையத்தை வழங்கியதற்காக இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமை ஜியோவுக்கு உண்டு எனவும் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவை 2G-mukt -ஆக (இலவச 2 ஜி இன்டர்நெட்) மாற்றுவதற்கும் மற்றும் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதற்கான தனது குறிக்கோளை நிறுவனம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. மேலும், பல தொழில்நுட்ப நிறுவனங்களும் ரிலையன்ஸ் ஜியோ-விற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. ரிலையன்ஸ் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த கூகுள் நிறுவனம், "ஓகே கூகுளின், பிறந்தநாள் வாழ்த்துக்கள்," என்ற கூகுள் அஸ்சிஸ்டன்ஸின் வாய்ஸ் கமாண்ட்-ஐ சேர்த்துள்ளது.

Also read... 6000mAh பேட்டரி, 4ஜிபி ரேம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் சியோமியின் ரெட்மி 10 அறிமுகம்!

இதையடுத்து சியோமி இந்தியா நிறுவனம் "இந்தியாவில் இணைய புரட்சிக்கு ஊக்கமளித்ததற்காக" நிறுவனத்திற்கு நன்றி என கமெண்ட் செய்திருந்தது. இதுதவிர, சாம்சங் இந்தியா, விவோ இந்தியா மற்றும் நோக்கியா மொபைல் இந்தியா போன்ற பிற மொபைல் பிராண்டுகள் வாழ்த்து செய்திகளை பதிவிட்டுள்ளன. ஸ்ட்ரீமிங் நிறுவனங்களான அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் இந்தியா ஆகியவையும் ஜியோ நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

மலிவு விலையில் 5 ஜி இணைப்பை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை ரிலையன்ஸ் அறிவித்திருந்தது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படும் 4 ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தொலைபேசியில் இந்திய யூசர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ், ஸ்க்ரீன் டெக்ஸ்டின் ஆட்டோமேட்டிக் ரீட், மொழிபெயர்ப்பு மற்றும் அதிகரித்த ரியாலிட்டி ஃபில்டர்ஸ் உடன் ஸ்மார்ட் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

First published:

Tags: Jio, Reliance, Reliance Jio