ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஜியோ 5ஜி சேவையின் 3 முக்கிய சிறப்பம்சங்கள் இதுதான்! விவரம்!

ஜியோ 5ஜி சேவையின் 3 முக்கிய சிறப்பம்சங்கள் இதுதான்! விவரம்!

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

தற்போது இருக்கும் மொபைல் ஃபோனிலேயே 5ஜி சேவையை பயன்படுத்த மொபைல் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களை விட ஜியோவின் 5ஜி சேவை தனித்துவமானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டது. இந்நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனமும் தனது 5ஜி சேவையை 4 நகரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.

  ஜியோவின் True 5G பீட்டா வெர்ஷன், டெல்லி, மும்பை, வாரனாசி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்படவுள்ள நிலையில், பயனர்கள் தங்கள் சிம் கார்டை மாற்ற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இருக்கும் மொபைல் ஃபோனிலேயே 5ஜி சேவையை பயன்படுத்த மொபைல் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருகிறது.

  இதையும் வாசிக்க: Lava Blaze 5G: விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்தியாவின் மலிவு விலை 5G ஸ்மார்ட் ஃபோன்

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது வாங்கிய 5G ஸ்பெக்ட்ரம் கலவையை ஜியோ கொண்டுள்ளது. சிறந்த உட்புற 5G கவரேஜை உறுதியளிக்கும் 700 MHz லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் கொண்ட ஒரே ஆபரேட்டர் ஜியோ ஆகும்.

  ஜியோவின் 5G சேவை மற்ற நிறுவனங்களை விட 3 முக்கிய அம்சங்களில் மாறுபடுகிறது.

  லோ லேடென்ஸி நெட்வொர்க் - பொதுவாக 4ஜி தொழில்நுட்ப கட்டமைப்பில் 5ஜி சேவையை பயன்படுத்துவதால் சிறு தாமதம் இருக்கும் ஆனால் ஜியோ நிறுவனம் 5ஜிக்கென தனி கட்டமைப்பை கொண்டுள்ளதால் மிக வேகமாக இருக்கும்.
  5ஜி குரல் அம்சம் - 5ஜி சேவையை இண்டெர்னெட் டேட்டாவிற்காக மட்டும் பயன்படுத்தாமல் ஜியோ வாய்ஸ் கால் சேவையாகவும் பயன்படுத்துவதால் ஆடியோ கிலாரிட்டி அதிகமாக இருக்கும்.
  நெட்வொர்க் ஸ்லைசிங் - பிராட்பேண்ட், ஐஒடி, இண்டெர்னெட் ரேடியோ என பல்வேறு வகையான இண்டெர்னெட் சேவைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் வேகம் குறையலாம். ஆனால் ஜியோவில் நெட்வொர்க் ஸ்லைசிங் முறை பின்பற்றப்படுவதால் அனைத்து சேவைகளையும் ஒரே நேரத்தில் அதிகபட்ச வேகத்திலேயே பயன்படுத்தலாம்.
  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: 5G technology, Jio, Reliance Jio