முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இணைய பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்.. Vi, ஏர்டெல் நெட்வொர்க்குகளின் வேகம் என்ன?

இணைய பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்.. Vi, ஏர்டெல் நெட்வொர்க்குகளின் வேகம் என்ன?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

வலைத்தளங்களை அணுகுவதற்கும், ஸ்ட்ரீமிங் கண்டெண்ட் மற்றும் பிற இணைய உலாவல் செயல்பாடுகளுக்கும் பதிவிறக்க வேகம் முக்கியமானது,

  • Last Updated :

இந்திய நெட்வொர்க்குகளில், 4ஜி இணைய பதிவிறக்க வேகத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், ஜூன் மாதத்திற்கான நெட்வொர்க்குகளின் இணைய வேகம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

ட்ராய் நிறுவன அறிக்கையின்படி, ஒரு நொடிக்கு சராசரியாக 21.9 Mbps பதிவிறக்க வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து முதலிடத்தையும் ஜியோ தக்க வைத்து வருகிறது. அதே நேரத்தில் போட்டி நிறுவனங்களின் பதிவிறக்க வேகத்தை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு கூடுதல் வேகத்தை ரிலையன்ஸ் ஜியோ பெற்றிருக்கிறது.

4ஜி இணைய பதிவிறக்க வேகத்தில் இரண்டாம் இடத்தை வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் பெற்றுள்ளது. அதனுடைய வேகமானது நொடிக்கு 6.2 Mbps ஆக உள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோவின் (21.9 Mbps) பதிவிறக்க வேகத்துடன் ஒப்பிடுகையில் அருகில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:   ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

இணைய பதிவிறக்க வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது. அதனுடைய வேகமானது நொடிக்கு 5 Mbps ஆக உள்ளது.

வலைத்தளங்களை அணுகுவதற்கும், ஸ்ட்ரீமிங் கண்டெண்ட் மற்றும் பிற இணைய உலாவல் செயல்பாடுகளுக்கும் பதிவிறக்க வேகம் முக்கியமானது, அதேசமயம் பதிவேற்ற வேகம், பயனர்கள் இணையத்தில் வேகமாக கண்டெண்ட்களை அனுப்ப அல்லது பகிர உதவுகிறது.

ட்ராய் நிறுவன தகவல்களின்படி, இணைய பதிவேற்ற வேகத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தில் பதிவேற்ற வேகமானனு 6.2 Mbps ஆக உள்ளது.

Also Read:    Paytm பயன்படுத்துகிறீர்களா? ரூ.50 கோடி cashback Offer!

பதிவேற்ற வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ 4.8 Mbps வேகத்துடன் இரண்டாம் இடத்தையும், 3.9 Mbps வேகத்துடன் ஏர்டெல் நிறுவனம் கடைசி இடத்தையும் பிடித்திருக்கின்றன.

மத்திய அரசு நிறுவனமான BSNL, சில பகுதிகளில் 4ஜி இணைய சேவையை கொண்டு வந்திருந்தாலும் கூட ட்ராய் தனது இணைய வேகத்துக்கான பட்டியலில் BSNL-ஐ இடம்பெறச் செய்யவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    மைஸ்பீட் செயலியில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சராசரி இணைய வேகத்தை TRAI கணக்கிடுகிறது.

    First published:

    Tags: Airtel, Hi-speed internet, Jio, Vodafone