• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Reliance Jio: ஜனவரி 1 முதல் அட்டகாசமான சலுகை அறிவித்த ஜியோ..!

Reliance Jio: ஜனவரி 1 முதல் அட்டகாசமான சலுகை அறிவித்த ஜியோ..!

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இனி ஜியோ வாடிக்கையாளர்கள் தடையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

  • Share this:
    ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை இந்த புத்தாண்டில் அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்துள்ளதாகவும், இனி எல்லா அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பானது நாளை ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.

    இந்தியாவின் அதிவேக 4ஜி சேவை வழங்கும் நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, interconnect usage charges (IUC) என்ற கட்டணத்தை நிர்ணயித்திருந்தது. அதற்காக நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் மற்ற அழைப்புகளை மேற்கொள்ளும்போது தொலைதொடர்பு நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு வந்தது. ஜியோ நிறுவனமும், அதே தொகையை வசூலித்தது. ஆனால், அந்த கட்டணத்துக்கு ஈடாக நெட் டேட்டா வழங்கியது.

    தற்போது, ஜனவரி 1 முதல், மற்ற நெட்வொர்க்குக்கான IUC அழைப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக TRAI அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து, இனி ஜியோ வாடிக்கையாளர்கள் தடையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: