நாட்டில் மருத்துவ துறையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி உயர்தரமான மருத்துவ சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (ILBS-Institute of Liver and Biliary Science) நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தொடங்கியுள்ள ஜியோ நிறுவனம், இந்த ஜியோ ட்ரூ 5ஜி சேவையை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்துறையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
ரோபோ மூலமாக சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், ரிமோட் ஐசியு, ஐசியு ஆம்புலன்ஸ், கம்யூனிட்டி கிளினிக் போன்ற பல்வேறு வசதிகளை ஜியோவுடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது. குறிப்பாக, ஆம்புலன்ஸ்சில் அவசரக்கால வசதிகளை தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவைகளுடன் இணைப்பது மருத்துவத்துறை புதிய மைல்கல் ஆகும்.
உதாரணமாக, ஆம்புலன்சில் ஜியோ 5ஜி சேவையை இணைத்து அதில் நவீன கேமாராக்ள் மற்றும் ஸ்மார்ட் கருவிகள் பொருத்துவதுடன், ரியல் டைமில் ஆம்புலன்சில் உள்ள ஆடியோ, வீடியோ தகவல்கள் பரிமாறப்படும். ஆம்புலன்ஸ் புட்டேஜுகள், ஆம்புலன்ஸ் பயணிக்கும் பாதை, ஆம்புலன்சில் உள்ள நோயாளியின் ரியல் டைம் உடல்நிலை போன்ற அனைத்தையும் தொலைவில் உள்ள மருத்துவருக்கு இந்த அதிவேக 5ஜி சேவை மூலம் கொண்டு சேர்க்க முடியும்.
இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ள மெடுலன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 7,500 ஆம்புலன்ஸ்களை ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்களாக மாற்றி ஜியோவின் 5ஜி சேவையுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்டரம் உரிமத்தை பெற்று ஜியோ நிறுவனம் நாட்டிலேயே ஸ்டான்ட் அலோன் 5ஜி சேவையை வழங்கவுள்ளது. ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் Non ஸ்டான்ட் அலோன் நெட்வொர்க்காக உள்ளன. 2023-24க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை சேர்க்க ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Health, Reliance Jio, Technology