• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்

ரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு - ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்

சில்வர் லேக் - ஜியோ

சில்வர் லேக் - ஜியோ

Reliance Jio | ரிலையன்ஸ் ஜியோவில் சமீபத்தில் 6 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஜியோ நிறுவனத்தில் சமீபத்தில் 6 நிறுவனங்கள் 87, 655 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா ஆகிய நிறுவனங்கள் ஜியோவின் 18.97 சதவீத பங்குகளை வாங்கியுள்ளன.

    இதில், அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை கடந்த மாதம் ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியிருந்தது. இந்த நிலையில், சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ஜியோவின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இம்முறை ரூ 4546 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.

    இதன் மூலம், ஜியோ நிறுவனத்தில் சில்வர் லேக் நிறுவனம் ரூ, 10,202.55 கோடி மதிப்பிலான 2.08 சதவிகித பங்குகளை வைத்திருக்கும்.

    அபு தாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான முபடாலா முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.85 விழுக்காடு பங்குகளை 9 ஆயிரத்து 93 கோடிக்கு வாங்குவதாக இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: