155-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா- ஜியோ மூலம் சாத்தியமானது!

1 ஜிபி 500 ரூபாய் என்றிருந்த காலம் மாறி இன்று 1ஜிபி டேட்டா 10 ரூபாய் என்ற வீதம் கிடைக்கிறது.

155-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா- ஜியோ மூலம் சாத்தியமானது!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 14, 2019, 9:08 PM IST
  • Share this:
மொபைல் டேட்டா பயன்படுத்துவதில் 155-வது இடத்திலிருந்த இந்தியா ஜியோ வருகையால் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மொபைல் தகவல் பரிமாற்றத்தில் இந்தியா இன்று சர்வதேச அளவில் முன்னணி நாடாக வளர்ந்துள்ளது. மொபைல், இணைய பயன்பாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா பலகட்ட வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் மஹேந்திரா நஹாதா கூறுகையில், “சராசரியாக இன்று இந்தியாவில் தனி நபர் ஒருவரின் டேட்டா பயன்பாடு 9ஜிபி-க்கும் அதிகமானதாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 155-வது இடத்திலிருந்த இந்தியாவின் மொபைல் டேட்டா பயன்பாடு இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இது சர்வதேச ரேங்கிங் ஆகும். இந்தியாவில் 4ஜி தொழில்நுட்ப வளர்ச்சியும் 4ஜி மொபைல் ஹேண்ட்செட் பயன்பாடும் அதிகம் இருப்பது பலம் ஆகும்” என்றுள்ளார்.


1 ஜிபி 500 ரூபாய் என்றிருந்த காலம் மாறி இன்று 1ஜிபி டேட்டா 10 ரூபாய் என்ற வீதம் கிடைக்கிறது. இதனால் கிராமப்புறங்களில் மிகவும் குறைவான வருவாய் உள்ள ஒருவர் கூட மொபைல் டேட்டா பயன்படுத்தும் வாய்ப்பை ஜியோ வழங்கியதாகக் கூறப்படுகிறது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள் டேட்டா பயன்பாடு தொடர்பான துறை வருவாய் மட்டும் 10 ட்ரில்லியன் டாலர்கள் ஆக உய்ரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ஹெக்டார் இரண்டாம் கட்ட முன்பதிவுக் காலம்...அதீத வரவேற்பால் திணறும் MG மோட்டார்ஸ்

தீபாவளி புக்கிங்: ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை
First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading