Home /News /technology /

சேட்டிலைட் மூலம் இணைய சேவை- தயாராகும் ஜியோ நிறுவனம்

சேட்டிலைட் மூலம் இணைய சேவை- தயாராகும் ஜியோ நிறுவனம்

ஜியோ

ஜியோ

Reliance Jio: சேட்டிலைட் மூலம் இணையசேவை வழங்குவதற்கு ஜியோ நிறுவனம் தயாராகிவருகிறது.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் ஜியோ (JIO) ப்ளாட்ஃபார்ம் நிறுவனமும், எஸ்.ஈ.எஸ் எனப்படும் செயற்கைக்கோள் மூலம் சேவைகளை வழங்கும் நிறுவனமும் ஒன்றினைந்து நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் மூலம் இணையவசதி சேவையை வழங்கவுள்ளனர்.

    இந்தநிறுவனத்தின் பங்குகளில் ஜியோ நிறுவனம் 51 சதவீத பங்குகளையும் எஸ்.ஈ.எஸ் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், தொலைதொடர்பு சேவைக்காக விண்வெளியில் இடைப்பட்ட பூமியின் சுற்றுவட்டப்பாதையையும், பூமிக்கு இணையான சுற்றுவட்டப்பாதையையும் பயன்படுத்தவுள்ளது.

    அதன்மூலம், இணையசேவை நிறுவனங்களுக்கும் மொபைல்போன்களுக்கும், இந்தியா மற்றும் சுற்றியுள்ள அண்டைநாடுகள் முழுவதுமுள்ள நுகர்வோர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைநிறுவனம், எஸ்.இ.எஸின் செயற்கைக்கோள் டேட்டாவை மற்றும் கனெக்டிவிட்டி சேவைகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஒரு கருவியாக இருக்கும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Jio

    அடுத்த செய்தி