Home /News /technology /

Reliance Jio: ரூ.1க்கு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் - ஜியோ அசத்தல்

Reliance Jio: ரூ.1க்கு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் - ஜியோ அசத்தல்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

புதிய ரீசார்ஜ் திட்டம் MyJio ஆப்பில் உள்ள "பிற திட்டங்கள்" டேப்பின் கீழ் "மதிப்பு" பிரிவில் கிடைக்கிறது. அதாவது, ஒரு பயனர் இந்த திட்டத்தில் 10 முறை ரீசார்ஜ் செய்தாலும், 1ஜிபி டேட்டாவை வெறும் ரூ.10க்கு பெறலாம். இது பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிளானை விட மலிவானது ஆகும்.

மேலும் படிக்கவும் ...
    ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் நாட்டிலேயே மிக குறைந்த விலையாக 1 ரூபாய்க்கு டேட்டா பிளானை அறிவித்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ திகழ்கிறது. அண்மையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் பிளான் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு ரூபாய்க்கான டேட்டா பிளானை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    அதன்படி, 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 100 MB டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். 100 எம்பி முழுவதும் தீர்ந்தபின்னர் இணைய வேகம் 64 Kbps ஆக குறைந்துவிடும்.

    புதிய ரீசார்ஜ் திட்டம் MyJio ஆப்பில் உள்ள "பிற திட்டங்கள்" டேப்பின் கீழ் "மதிப்பு" பிரிவில் கிடைக்கிறது. அதாவது, ஒரு பயனர் இந்த திட்டத்தில் 10 முறை ரீசார்ஜ் செய்தாலும், 1ஜிபி டேட்டாவை வெறும் ரூ.10க்கு பெறலாம். இது பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிளானை விட மலிவானது ஆகும்.

    இதையும் படிங்க: உங்கள் ப்ரைவசியில் ஊடுருவும் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை பிளாக் செய்யும் WhatsApp.... புதிய அம்சம் அறிமுகம்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Jio, Reliance Jio

    அடுத்த செய்தி