நான்காவது காலாண்டில் ₹ 2331 கோடி லாபத்தை ஈட்டிய ஜியோ...!

ஒரு ஜியோ வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மாதத்துக்கு 11.3 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகின்றார்

நான்காவது காலாண்டில் ₹ 2331 கோடி லாபத்தை ஈட்டிய ஜியோ...!
ரிலையன்ஸ் ஜியோ
  • News18
  • Last Updated: May 1, 2020, 11:43 AM IST
  • Share this:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நான்காவது காலாண்டில் 2331 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் லாபமானது 840 கோடி ரூபாயாக இருந்தது. 2020 மார்ச் 31ம் தேதி வரை ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.75 கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டை விட 26.3 விழுக்காடு அதிகமாகும். ஜியோ தளங்களின் வளர்ச்சிக்காக 14,976 கோடி ரூபாயை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது.


நான்காம் காலாண்டில் மொத்த ஒயர்லெஸ் டேட்டாவின் அளவு ஆயிரத்து 284 கோடி ஜிபிஆகும். இது கடந்தாண்டைவிட 34. 3 விழுக்காடு அதிகமாகும். அதாவது ஒரு ஜியோ வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மாதத்துக்கு 11.3 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாகவும், அவர்கள் சராசரியாக ஒரு மாதத்தில் 771 நிமிடங்கள் வாய்ஸ் காலில் பேசுவதாகவும் ஜியோவின்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


First published: May 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading