ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் இலவசம்!

ஜியோ ப்ரீபெய்ட் பயனாளர்கள் கூடுதல் கட்டணமின்றி டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஓராண்டு சந்தாவை பெற்று, புத்தம் புதிய ஹாலிவுட், பாலிவுட், கோலிவு படங்களை கண்டுக்களிக்கலாம்

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் இலவசம்!
ஜியோ
  • Share this:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்கியுள்ளது.

அதன்படி, ஜியோ வாடிக்கையாளர்கள் 401 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் வசதியுடன் 28 நாட்களுக்கு டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோன்று 2599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு 740 ஜிபி டேட்டாவுடன் டிஸ்னி, ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை பெற முடியும்.



இதன்மூலம், புதிதாக ரிலீஸ் ஆன பாலிவுட் திரைப்படங்கள், இந்தி, தமிழ், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அவஞ்சர்ஸ் எண்டு கேம் போன்ற சூப்பர் ஹீரோ திரைப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், குழந்தைகள் விரும்பி பார்க்கும் மிக்கி மெளஸ், டோராமேன் போன்றவற்றை கண்டுகளிக்கலாம். இதேபோன்று விளையாட்டு போட்டிகளை நேரலையில் காண முடியும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.




First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading