கூகுள் மீட், ஸூம் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கிய ’ஜியோ மீட்’

Jio Meet | ஜியோ தளத்தில் இருந்து அடுத்தபடியாக வீடியோ கான்பரன்சிங் சேவைக்கான பிரத்யேக செயலியான ’ஜியோ மீட்’ வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் மீட், ஸூம் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கிய ’ஜியோ மீட்’
jio meet
  • News18
  • Last Updated: July 2, 2020, 10:18 PM IST
  • Share this:
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதனால், பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை பயிற்றுவிக்கின்றன.

இதற்காக, Zoom, Google Hangout போன்ற தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன.

ஜியோ மீட்இந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் சேவைக்கான பிரத்யேக செயலியை ஜியோ வெளியிட்டுள்ளது. ‘ஜியோ மீட்’ என்ற பெயரிலான இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வின்டோஸ் மார்கெட்டில் கிடைக்கும்.

செயலி இல்லாமலும், கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா பயர் பாக்ஸ் வழியாகவும் ஜியோ மீட் சேவையை பயன்படுத்த முடியும்.

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் ஜியோ மீட் தயாராகியுள்ளது. மற்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களை விட, ஜியோ மீட் பிரத்யேக அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த செயலி மூலம் உரையாட முடியும்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading