ரூ.198, ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து ‘ஜியோ சாம்சங் கேலக்சி எம் சீரிஸ்’ என்ற பெயரில் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் மூலம் சாம்சங் கேலக்சி எம் 10 மற்றும் சாம்சங் கேலக்சி எம் 20 ஆகியோ ஃபோன்களை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆஃபர் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ.199 மற்றும் 299-க்கு ரீசார்ச் செய்தால் டபுள் டேட்டா கிடைக்கும்.
அதாவது சாதாரணமாக ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முறையே 4ஜிபி டேட்டாவும், 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும்.
சாம்சங் கேலக்சி எம் 10 மற்றும் சாம்சங் கேலக்சி எம் 20 ஆகிய ஃபோன்கள் அமேசான் மற்றும் சாம்சங் இணையதளத்தில் கிடைக்கும்.
சாம்சங் கேலக்சி எம் 10 ஃபோனின் அம்சங்கள்:
a) 3 GB RAM with 32 GB, விலை - 8990
b) 2 GB RAM, with 16 GB, விலை - 7990
சாம்சங் கேலக்சி எம் 20 போனின் அம்சங்கள்:
a) 4 GB RAM, with 64 GB, விலை - 12,990
b) 3 GB RAM, with 32 GB, விலை - 10990