• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • JioPhone Next ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு வெளியீடு... ₹ 1,999 செலுத்தி வாங்கலாம்.... சிறப்பம்சங்கள் இதோ....

JioPhone Next ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு வெளியீடு... ₹ 1,999 செலுத்தி வாங்கலாம்.... சிறப்பம்சங்கள் இதோ....

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை 1,999 ரூபாய் டவுன்பேமெண்ட் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மீதத் தொகையை மாத தவணை மூலம் செலுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
கூகுள் நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப்புடன் உருவாக்கப்பட்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் வரும் தீபாவளி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்காக பிரகதி என்ற பிரத்யேக மென்பொருளை (OS) கூகுள் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. உலகின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக வெளிவர இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட், அருகாமையில் உள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் கடைக்கு நேரில் சென்றோ அல்லது ஜியோ.காம் என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, அல்லது ஒரு வாட்ஸ் அப் மெசேஜை அனுப்பவதன் மூலமோ வாங்கிவிட முடியும்.

மேலும் இந்த போனை வாங்குவதற்காக அட்டகாசமான வழிமுறை ஒன்றையும் ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை 1,999 ரூபாய் டவுன்பேமெண்ட் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மீதத் தொகையை சரிவிகித மாத தவணை மூலம் செலுத்திக் கொள்ளலாம். பரவலான வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் இது போல ஒரு நிதி ஏற்பாடு விஷேசமாக இந்த போனுக்காக செய்யப்பட்டிருக்கிறது.

Also read:  சென்னையில் பிறந்தவர்.. 10 வயதில் தேசிய விருது… மறைந்த புனித் ராஜ்குமாரின் சினிமா குடும்ப பின்னணி!

ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனானது, ஒரு ஜியோ சிம் உடன் கிடைக்கும். அந்த சிம்மில் 18 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் பிளான் வாலிடிட்டியை பெறமுடியும்.



இந்த போன் குறித்து ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் வர்த்தக சங்கிலி பாதிக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்ட சவால்களை கடந்து பண்டிகைக் காலத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் இந்த சாதனத்தை இந்திய நுகர்வோருக்குக் கொண்டு வருவதில் கூகுள் மற்றும் ஜியோ குழுக்கள் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என தெரிவித்தார்.

Also read:   ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே இப்படிப்பட்டவரா? – சக NCB அதிகாரி கூறும் உண்மைகள்!

முன்னதாக விநாயகர் சதுர்த்தியன்று இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், செமிகண்டக்டர்கள் தட்டுப்பாட்டால், இதன் அறிமுகம் தாமதமாகி தற்போது தீபாவளிக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய டெலிகாம் சந்தையில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவற்றிற்கு சவாலை தரும் வகையில் இந்த புதிய போனுடன் ஜியோ களமிறங்குகிறது. இது தவிர 500 மில்லியன் சந்தாதாரர்களை கடக்க வேண்டும் என்ற அந்நிறுவனத்தில் இலக்கும் இதன் மூலம் எட்டப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: