Home /News /technology /

ரூ.3000 மதிப்பிலான ஆஃபர்கள்... சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ அதிரடி அறிவிப்பு

ரூ.3000 மதிப்பிலான ஆஃபர்கள்... சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ அதிரடி அறிவிப்பு

ஜியோ

ஜியோ

Jio Offer | சுதந்திர தின சலுகை திட்டத்தின் மூலம் ப்ரீபெயிட் பிளான் வாங்குபவர்களுக்கு 365 நாள் அல்லது ஓராண்டு வரை தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பண்டிகை கால சலுகையாக, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஜவுளி வரை, பல்வேறு பெரு நிறுவனங்களும் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும். பண்டிகை காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. பொதுவாக, விசேஷ நாட்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த சலுகை சில நேரங்களில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நாட்களிலும் கூட நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்குகளில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது. ₹3000 வரைக்கான நன்மைகளை ஜியோ யூஸர்கள் பெற முடியும். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ நிறுவனம், ஜியோ சுதந்திர தினம் 2022 ஆஃபர் என்ற புதிய ஒரு திட்டத்தை தனது ப்ரீபெய்ட் யூசர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி ஓராண்டு வேலிடிட்டி, மற்றும் ஒரு நாளைக்கு குறிப்பிக்க அளவுக்கு டேட்டா உள்ளிட்ட ₹3000 க்கு மதிப்பிலான பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்திற்கும் நீங்கள் ஓராண்டுக்கான சப்ஸ்கிரிப்ஷனை பெறுவீர்கள். இந்த ஜியோ இன்டிபென்டென்ஸ் டே 2022 ஆஃபர் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

    ஜியோ- கிளான்ஸ்


    ஜியோ இன்டிபென்டென்ஸ் டே 2022 ஆஃபர்

    ஜியோ பல்வேறு நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ப்ரீபெயிட் திட்டத்தில், பல்வேறு அம்சங்களுடன் ஓராண்டுக்கான ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோவில் கிடைக்கின்றன. இந்த இன்டிபென்டென்ஸ் டே சலுகை திட்டத்தில் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஜியோ சூட் செயலிகளும் கிடைக்கும். இந்த ப்ரீபெயிட் திட்டத்தின் விலை ₹2,999.

    ஜியோ இன்டிபென்டென்ஸ் டே 2022 ஆஃபரில் கிடைக்கும் நன்மைகள்

    இந்த சுதந்திர தின சலுகை திட்டத்தின் மூலம் ப்ரீபெயிட் பிளான் வாங்குபவர்களுக்கு 365 நாள் அல்லது ஓராண்டு வரை தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அடுத்ததாக அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. ஜியோ நெட்வொர்க் மட்டுமல்லாமல் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வரை இலவசமாக அனுப்ப முடியும். ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், ஜியோ இன்டர்நெட்டின் வேகம் 64 kpbs ஆக குறையும்.

    Also Read : இந்தியாவில் 5ஜி... தகவல் தொடர்பு துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும்?

    இந்த ப்ரீபெய்ட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ₹499 மதிப்புள்ள டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓராண்டுக்கான மொபைல் சந்தாவும் 75 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் ஜியோ சூட் செயலிகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த ஆபர்களை தவிர்த்து ஜியோ இன்டிபென்டென்ஸ் டே 2022 பிளான் வாங்குபவர்களுக்கு ₹750 மதிப்புள்ள Ajio கூப்பன், NetMeds இல் ₹750 தள்ளுபடி கூப்பன் மற்றும் Ixigo வில் ₹750 ரூபாய்க்கான தள்ளுபடி கூப்பன் மூன்று கூப்பன்கள் கிடைக்கும்.

    ஜியோ வலைத்தளத்தில் அல்லது MyJio செயலியில் இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Jio

    அடுத்த செய்தி