ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Jio Recharge Plan: ஜியோ ரீசார்ஜ் பிளான் அப்டேட்.. இனி தினம் டேட்டாவை எவ்வளவு வேணும்னாலும் பயன்படுத்தலாம்

Jio Recharge Plan: ஜியோ ரீசார்ஜ் பிளான் அப்டேட்.. இனி தினம் டேட்டாவை எவ்வளவு வேணும்னாலும் பயன்படுத்தலாம்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio app-ல் No Daily Limit பிரிவின் கீழ் இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை காணலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் வலுவான பிராண்டாக மதிப்படப்பட்டுள்ள டெலிகாம் ஆப்ரேட்டர் ஜியோ வாடிக்கையாளர்களுக்காக தினசரி வரம்பின்றி (no daily limit) கிடைக்க கூடிய வகையில் புதிய 5 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய நோ டெய்லி லிமிட் திட்டங்கள் 15 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜியோ தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ள திட்டங்களின்படி, இந்த புதிய திட்டங்களை 15 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள், 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டங்கள் கூடுதல் டேட்டாக்களுக்காக டேட்டா வவுச்சர்களை வாங்க விரும்பாதவர்களுக்கும், எந்த ஓரு கட்டுப்பாடுகளும் இன்றி எந்த நாளிலும் அன்லிமிடட் டேட்டாவை பயன்படுத்த நினைப்பவர்களுக்கும் ஏற்றவையாக உள்ளன. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், இந்த புதிய திட்டங்கள் ஹை டேட்டா யூஸர்ஸ், டெய்லி டேட்டா லிமிட் தீருவதை பற்றி கவலைப்படாமல் தடையற்ற டேட்டாவை அனுபவிக்க உதவும், அதே நேரத்தில் 30 நாள் வேலிடிட்டி சைக்கிள் ரீசார்ஜ் தேதியை நினைவில் கொள்வதை எளிதாக்குகிறது என கூறி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜியோவிலிருந்து வழங்கப்படும் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் எந்த ஒரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடட் வாய்ஸ் காலிங்,, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஜியோவின் தகவல் மற்றும் பயன்பாடுகளுக்கான ஜியோ ஆப்ஸ்களுக்கு ஃப்ரீ அக்சஸ் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. MyJio app-ன் படி புதிதாக ரூ.127-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் யூஸர்களுக்கு மொத்தம் 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Also read... Jio: உலகின் வலிமையான தொலைத் தொடர்பு பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் ஜியோ - பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கை!

மேலும் இது 15 நாட்கள் வேலிடிட்டி பீரியடுடன் வருகிறது. அடுத்த திட்டம் ரூ.247-க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் டெய்லி FUP வரம்பு இன்றி 25 ஜிபி டேட்டாவை யூஸர்களுக்கு அளிக்கிறது. மூன்றாவதாக ரூ.447-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி வரம்பற்ற 50 ஜிபி டேட்டா நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அடுத்தது ரூ.597-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள் வேலிடிட்டியுடன், தினசரி வரம்பற்ற 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இறுதியாக ரூ.2,397 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 365 ஜிபி டோட்டல் டேட்டாவுடன் வருகிறது. இது ஒரு வருடாந்திர திட்டம். இந்த ப்ரீபெய்ட் ஸ்கீமில் ரீசார்ஜ் செய்தால் 365 நாள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த காஸ்ட்லீ ஸ்கீம் தான் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ஆப்ஸ்களுக்கான ஒரு முழு அணுகலை வழங்குகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio app-ல் No Daily Limit பிரிவின் கீழ் இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை காணலாம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Jio