ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை - ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை - ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்!

ராஜஸ்தானில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை

ராஜஸ்தானில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை

நாடு முழுவதும் ஜியோவின் 5ஜி சேவைத் தொடங்கப்பட்டு வரும் நிலையில் இன்று சென்னை உள்பட 2 நகரங்களில் 5 ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rajasthan, India

  நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ சென்னை உள்ளிட்ட மேலும் இரு நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.

  ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் நத்வரா பகுதியில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி வழிபாடு நடத்தினார். அதைத்தொடர்ந்து நத்வரா மற்றும் சென்னையில் இன்று முதல் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி அறிவித்தார்.

  அதனையடுத்து பேசிய அவர், 5ஜி சேவை  இன்று முதல் தமிழகத்தில் சென்னை, ராஜஸ்தான் மாநிலத்தில் நத்வரா உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

  மேலும் நத்வரா மற்றும் சென்னையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜியோ 5ஜி வைபை சேவை இன்று முதல் தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

  Also Read : ஆமைக்கறி வறுவலை சரியாக சமைக்காத மனைவியை அடித்தே கொன்ற கணவர்... அதிர்ச்சி சம்பவம்!

  அக்டோபர் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் அதிவேக 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். அதனையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சேவையை இந்தியா முழுவதும் தொடங்கி வருகின்றனர். அப்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் சென்னை, ராஜஸ்தான் மாநிலத்தில் நத்வரா ஆகிய இரு பகுதிகளில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

  மேலும் 2023ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5 ஜி புரட்சியை ரிலையன்ஸ் ஜியோ வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Aakash ambani, Rajastan, Reliance Jio