முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஏர்டெல், வோடஃபோனை தொடர்ந்து ஜியோ ரீசார்ஜ் கட்டணம் உயர்வு - New Plans முழு விவரம்

ஏர்டெல், வோடஃபோனை தொடர்ந்து ஜியோ ரீசார்ஜ் கட்டணம் உயர்வு - New Plans முழு விவரம்

Jio

Jio

Reliance Jio Prepaid Recharge Plans | ஏர்டெல், வோடஃபோனை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

  • Last Updated :

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் ப்ரீபெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை அண்மையில் உயர்த்திய நிலையில், இன்று ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது கட்டண உயர்வை நவம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்திய நிலையில், வோடஃபோன் நிறுவனமும் உடனடியாக கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜியோவும் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

அதன்படி, ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிச.1ம் தேதி முதல் அமலாகிறது. இந்த கட்டண உயர்வை தொடர்ந்து 28 நாட்களுக்கான ஜியோ போன் திட்டத்தின் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 91 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா பிளானில், மாதத்திற்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான் ரூ.129லிருந்து, ரூ.155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Airtel, Jio, Reliance Jio, Vodafone