Home /News /technology /

ஜியோ நிறுவனம் ஜூலை மாதத்தில் 29.4 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது - டிராய் தகவல்!

ஜியோ நிறுவனம் ஜூலை மாதத்தில் 29.4 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது - டிராய் தகவல்!

ஜியோ புதிதாக  29.4 லட்சம் பயனர்களைப் பெற்றுள்ளது

ஜியோ புதிதாக 29.4 லட்சம் பயனர்களைப் பெற்றுள்ளது

தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமான ஜியோ கடந்த ஜூலை மாதத்தில் 29.4 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளதாக டிராய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தகவலின் படி முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ இந்தியாவில் 41.59 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை இந்தியாவில் வழங்கி வருகின்றனர்.

    செப்டம்பர் 15ம் தேதி டிராய் வெளியிட்ட தகவலின் படி கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் புதிதாக 29.4 லட்சம் பயனர்களைப் பெற்றுள்ளது. அதே வேளையில் வோடபோன் ஐடியா 12.42 பயனர்களை இழந்துள்ளது. மேலும் கடந்த மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 5.13 புதிய பயனர்களைப் பெற்றுள்ளனர். தற்போது புதிய கணக்குப் படி இந்தியாவில் முதன்மை தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ 41.59 கோடி பயனர்களுடன் முன்னிலையில் சேவையை அளித்து வருகின்றனர்.

    Also Read : நாடு முழுவதும் தடையில்லா 5ஜி சேவைகளை வழங்க புதிய கூட்டணி..!

    அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 36.34 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் சிறிய அளவு பயனர்களை இழந்து 15.42 கோடி பயனர்களுடன் இருக்கின்றனர்.

    இதனையடுத்து இந்தியாவில் தொலைத்தொடர்பு பயனர்கள் கடந்த ஜூலை மாதத்துடன் 114.8 கோடியாக உயர்ந்துள்ளனர் என்று டிராய் அறிவித்துள்ளது. நகரப் பகுதியில் பயனர்கள் அதிகரித்து 62.6 கோடியாக உள்ளது. அதே நேரம் கிராமப்புற சிறிது பின்தங்கி 52.1 கோடியாக உள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Jio, Jio Fiber, Reliance Jio

    அடுத்த செய்தி