Home /News /technology /

புதிதாக 17.6 லட்சம் மொபைல் யூஸர்களை பெற்ற ஜியோ - பலத்த அடிவாங்கிய ஏர்டெல் மற்றும் விஐ!

புதிதாக 17.6 லட்சம் மொபைல் யூஸர்களை பெற்ற ஜியோ - பலத்த அடிவாங்கிய ஏர்டெல் மற்றும் விஐ!

ஜியோ

ஜியோ

செப்டம்பர் மாதத்தில் ஜியோ 1.90 கோடி யூஸர்களை இழந்த நேரத்தில், அடுத்த மாதமான அக்டோபரில் ஜியோவின் சப்ஸ்கிரைபர் பட்டியலில் அதிகரிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த அக்டோபர் 2021-ல் மட்டும் சுமார் 17.6 லட்சம் மொபைல் சப்ஸ்கிரைபர்ஸ்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஜியோவுக்கு போட்டியாளர்களாக இருக்கும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டு மொத்தமாக சுமார் 14.5 லட்சம் யூஸர்களை இழந்து உளளதாக சமீபத்தில் TRAI வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பல லட்சம் யூஸர்களை இழந்துள்ள பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களில் பலத்த அடி வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு தான் விழுந்துள்ளது.
ஏனென்றால் TRAI-ன் தகவல்படி கடந்த அக்டோபர் மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் சுமார் 4.89 லட்சம் மொபைல் யூஸர்களை இழந்துள்ள அதே நேரத்தில், வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 9.64 லட்சம் மொபைல் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது.

இதனை தொடர்ந்து அக்டோபர் 2021-ல் மார்க்கெட் ஷேரின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் டெலிகாம் ஆபரேட்டராக ரிலையன்ஸ் ஜியோ நீடிக்கிறது. யூஸர்களை இழந்தாலும் மொபைல் நெட்வொர்க் இடத்தில் மொத்தம் 35.39 கோடி யூஸர்களுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக பார்தி ஏர்டெல் இருந்து வருகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அக்டோபரில் மொத்தம் 9.64 லட்சம் யூஸர்களை இழந்துள்ள இந்நிறுவனம்TRAI தகவலின்படி அதன் யூஸர் ஷேர் 26.9 கோடியாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் 17.61 லட்சம் மொபைல் யூஸர்களை ஜியோ சேர்த்துள்ளதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அக்டோபரில் 42.65 கோடியாக உயர்ந்துள்ளது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) டேட்டாக்கள் தெரிவிக்கின்றன.

Also read... பிறருக்கு தெரியாதபடி ரகசியமாக இன்ஸ்டா ஸ்டோரீஸ்களை பார்ப்பது எப்படி?

செப்டம்பர் மாதத்தில் ஜியோ 1.90 கோடி யூஸர்களை இழந்த நேரத்தில், அடுத்த மாதமான அக்டோபரில் ஜியோவின் சப்ஸ்கிரைபர் பட்டியலில் அதிகரிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட TRAI-ன் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் டேட்டா படி, ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 2.74 லட்சம் மொபைல் யூஸர்களை சேர்த்துள்ளது.

Also read... Vi வாடிக்கையாளர்கள் தங்கள் டேட்டா பேலன்ஸ், பிளான் வேலிடிட்டியை எவ்வாறு சரிபார்ப்பது?

வோடபோன் ஐடியா கடந்த செப்டம்பரில் மொத்தம் 10.77 லட்சம் யூஸர்களை இழந்தது. இதனிடையே அக்டோபர் 2021-ன் இறுதியில் இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் (telephone subscribers) மொத்த எண்ணிக்கை 1,189.62 மில்லியனாக (118.96 கோடி) அதிகரித்து உள்ளது. இதன்படி தற்போது மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.04% ஆகும்.

Also read... குளிர்காலம் தொடங்கியதை வரவேற்க கூகுள் வெளியிட்டிருக்கும் அனிமேட்டட் டூடுல்!

அதே நேரத்தில் அக்டோபர் 2021 இறுதியில் நகர்ப்புற தொலைபேசி சந்தா (Urban telephone subscription) 658.83 மில்லியனாக (65.88 கோடி) குறைந்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா ( rural subscription) 530.79 மில்லியனாக (53.07 கோடி) உயர்ந்துள்ளது. அக்டோபர் இறுதியில் மொத்த பிராட்பேண்ட் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 798.95 மில்லியனாக (79.8 கோடி) அதிகரித்துள்ளது என்று TRAI தகவல் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Airtel, Reliance Jio

அடுத்த செய்தி