இலவச டிவி, செட்டாப் பாக்ஸ் உடன் ஜியோ ஃபைபர் ப்ளான்கள் அறிவிப்பு - ₹699 முதல் அசத்தல் பேக்கேஜ்கள்

அனைத்து பிளான்களுக்கும் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும். கோல்ட் பிளான் அதற்கு மேலான பிளான்களை பயன்படுத்துவோர் டிவி இலவசமாக பெறலாம்.

News18 Tamil
Updated: September 5, 2019, 9:19 PM IST
இலவச டிவி, செட்டாப் பாக்ஸ் உடன் ஜியோ ஃபைபர் ப்ளான்கள் அறிவிப்பு - ₹699 முதல் அசத்தல் பேக்கேஜ்கள்
அனைத்து பிளான்களுக்கும் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும். கோல்ட் பிளான் அதற்கு மேலான பிளான்களை பயன்படுத்துவோர் டிவி இலவசமாக பெறலாம்.
News18 Tamil
Updated: September 5, 2019, 9:19 PM IST
ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் அறிமுகமாகியுள்ளது. ₹699 முதல் அசத்தலான பேக்கேஜ்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இந்த சேவையை பெற அந்தந்த பகுதியில் உள்ளோர் ஆன்லைனில் பதிவு செய்தால், பெரும்பான்மையை பொறுத்து, முன்னுரிமை அடிப்படையில் பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் வழங்கும்.

jio.com அல்லது My Jio மொபைல் செயலி வழியாக தகவல்களைக் கொடுத்து முன் பதிவு செய்யலாம். இண்டர்நெட், கேபிள், லேண்ட்லைன் ஆகியவை குறைந்தபட்சம் 699 முதல் பிளான்களுக்கு ஏற்ப கிடைக்கப்பெறும்.


பிளான்கள் விவரம்:அனைத்து பிளான்களுக்கும் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும். கோல்ட் பிளான் அதற்கு மேலான பிளான்களை பயன்படுத்துவோர் டிவி இலவசமாக பெறலாம்.

Loading...

அது மட்டுமல்லாது ஓடிடி, வீடியோ கால்கள், கேம்ஸ் உள்ளிட்ட சேவைகளையும் இலவசமாக பெறக்கூடிய சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

3, 6, 12 மாத பிளான்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ஈ.எம்.ஐ. மூலம் கட்டணம் செலுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

Watch Also:

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...