ரிலையன்ஸ் ஜியோ - பேஸ்புக் கூட்டணி மூலம் சிறு மற்றும் சில்லறை வணிகர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் தொடங்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.
மேலும், சிறு குறு வணிகங்களையும், மக்களையும் இணைக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோ-மார்ட்டுடன் பேஸ்புக் நிறுவனம் இணைந்து வணிக தொடர்பை விரிவுபடுத்த உள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் ஜியோவின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக பேஸ்புக் உருவெடுத்துள்ளதாகவும், இந்த கூட்டு முயற்சியால் இந்தியா டிஜிட்டல் சேவையில் மிகப் பெரிய தேசமாக இருக்கும் என்றும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரிலையன்ஸ் நிறுவனத்துடனான இந்த வர்த்தக முயற்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களுக்கும், வணிகங்களுக்கும் புது வழிகளைத் திறக்கும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சிறு வணிகர்களை இணைக்கும் வகையில் ஜியோ மார்ட் என்ற இ-காமர்ஸ் அமைப்பை ரிலையன்ஸ் தொடங்கியது. சிறு மற்றும் சில்லரை வணிகர்கள் இதில் பதிவு செய்துகொள்ளும் பட்சத்தில், அவர்களின் பொருட்களை ஜியோ மார்ட் டெலிவரி செய்யும்.
அதாவது, தற்போது பேஸ்புக், ஜியோ உடன் இணைந்துள்ள நிலையில், வாட்ஸப் மற்றும் மெசேஞ்ஞர் வாயிலாக சிறு வணிகர்கள் ஆர்டர்களைப் பெற்று, ஜியோ மார்ட் அதனை டெலிவரி செய்யும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.